/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அருள்மிகு மாரியம்மன் ஸ்வீட்ஸ் கிளை திறப்பு விழா கோலாகலம்
/
அருள்மிகு மாரியம்மன் ஸ்வீட்ஸ் கிளை திறப்பு விழா கோலாகலம்
அருள்மிகு மாரியம்மன் ஸ்வீட்ஸ் கிளை திறப்பு விழா கோலாகலம்
அருள்மிகு மாரியம்மன் ஸ்வீட்ஸ் கிளை திறப்பு விழா கோலாகலம்
ADDED : மார் 13, 2025 06:51 AM

திருப்பூர்; திருப்பூர், தாராபுரம் ரோடு, புதுார் பிரிவு, நெல்லை கருப்பட்டி காபி எதிரில், விமல் வளாகத்தில், அருள்மிகு மாரியம்மன் ஸ்வீட்ஸ் நிறுவனத்தின், திருப்பூர் 2வது கிளை, திறப்பு விழா நடந்தது.
'மாரியம்மன் ஸ்வீட்ஸ்' சேர்மன் டாக்டர் தனபால் புதிய கிளையை திறந்து வைத்தார். நிறுவன இயக்குனர்கள் பரணி காஞ்சனா, ஸ்ரீ ஹரிதனபால், மிதுன்கேசவ் தனபால் உள்ளிட்டோர் பங்கேற்றனர். சிறப்பு விருந்தினர்களாக துரைசாமி, விவேகானந்தன், கோபால், முத்துக்குமாரசாமி கலந்து கொண்டனர்.
மாரியம்மன் ஸ்வீட்ஸ் இயக்குனர்கள் கூறியதாவது:
எங்கள் நிறுவனம், 1998ல் பொள்ளாச்சியில் துவங்கப்பட்டது. கோவையில் ராமநாதபுரம், வடவள்ளி, ஜி.என்., மில்ஸ், சூலுார், உடுமலை, ஆனைமலை, பொள்ளாச்சியில் நான்கு இடங்களிலும், கேரள மாநிலம் கஞ்சிக்கோடு உள்ளிட்ட இடங்களிலும் செயல்படுகிறது. 2020ல் திருப்பூர் பல்லடம் ரோட்டில் கிளை திறக்கப்பட்டது. வாடிக்கையாளர்களின் வரவேற்பை தொடர்ந்து, தாராபுரம் ரோட்டில், 2வது கிளை துவங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.