ADDED : ஆக 08, 2024 12:06 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நொய்யல் விவசாயிகள் பாதுகாப்பு சங்க தலைமை ஒருங்கிணைப்பாளர் திருஞானசம்பந்தன், கலெக்டரிடம் அளித்த மனு:
கோவை பகுதியில் இருந்து, கழிவுகள், மருத்துவ கழிவுகள், தொழிற்சாலை கழிவு, மாநகராட்சி கழிவுகள் நொய்யல் ஆற்றில் கலக்கின்றன. திருப்பூரில் இருந்து ஒரத்துப்பாளையம் வரையிலும், ஆற்றில் கழிவுகள் கலக்கின்றன. நொய்யல் படுகை விவசாயிகள், கால்நடை வளர்ப்பு மற்றும் விவசாயத்தை தொடர முடியாத நிலை உள்ளது. தென்னை மரங்கள் அதிக அளவு பாதிக்கப்பட்டுள்ளன. சாமளாபுரம், மங்கலம், ஆண்டிபாளையம் துவங்கி, ஒரத்துப்பாளையம் வரை, பாதிப்பு உள்ளது. நொய்யல் ஆறு மாசுபடுவதை தடுக்கும் வகையில், மாதம்தோறும், மாசுக்கட்டுப்பாடு வாரியம் சார்பில் குறைகேட்பு கூட்டம் நடத்த வேண்டும்.