/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ராஜ கருப்பராயன் சுவாமி மீது சூரிய ஒளி விழும் அதிசயம்
/
ராஜ கருப்பராயன் சுவாமி மீது சூரிய ஒளி விழும் அதிசயம்
ராஜ கருப்பராயன் சுவாமி மீது சூரிய ஒளி விழும் அதிசயம்
ராஜ கருப்பராயன் சுவாமி மீது சூரிய ஒளி விழும் அதிசயம்
ADDED : செப் 04, 2024 02:20 AM

அவிநாசி;அவிநாசி அருகே காட்டு கருப்பராயன் கோவிலில் உள்ள கருப்பராயன் சிலை மீது சூரிய ஒளி விழும் அபூர்வ நிகழ்வு நடைபெற்றது.
அவிநாசி ஒன்றியம், சின்னேரிபாளையம் ஊராட்சி, கருக்கம்பாளையம் கிராமத்தில் காட்டு கருப்பராயன் கோவில் உள்ளது. இக்கோவிலில், ஆண்டுதோறும் ஆவணி மாதம் மூலவர் சந்நிதியில் சூரிய ஒளி விழும் அதிசயம் நடக்கிறது.
அவ்வகையில், நேற்று காலை 6:12 மணியளவில் சூரிய கதிர்கள் பரவி மெல்ல மெல்ல ராஜ கருப்பராயன் சுவாமி மீது விழ துவங்கியது. இதனால், மூலவர் 'தகதக' என தங்கம் போல் ஜொலித்தார். தொடர்ந்து மஹா தீபாராதனை நடைபெற்றது. இந்த அபூர்வ நிகழ்வை பக்தர்கள் பயபக்தியுடன் தரிசனம் செய்தனர்.
---
காட்டு கருப்பராயன் கோவிலில், மூலவர் மீது சூரிய ஒளி விழுந்தது.