/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'நீட்' தேர்வு நாளை நடக்கிறது மையங்களில் ஏற்பாடுகள் ஜரூர்
/
'நீட்' தேர்வு நாளை நடக்கிறது மையங்களில் ஏற்பாடுகள் ஜரூர்
'நீட்' தேர்வு நாளை நடக்கிறது மையங்களில் ஏற்பாடுகள் ஜரூர்
'நீட்' தேர்வு நாளை நடக்கிறது மையங்களில் ஏற்பாடுகள் ஜரூர்
ADDED : மே 03, 2024 11:38 PM
திருப்பூர்:திருப்பூர் மாவட்டத்தில் 'நீட்' தேர்வு நாளை நடக்கிறது. நான்கு மையங்களில், 2,169 பேர் தேர்வெழுதுகின்றனர். தேர்வுக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., உள்ளிட்ட இளநிலை மருத்துவ படிப்பில் சேர்வதற்கான 'நீட்' தேர்வை நாளை (5ம் தேதி) தேசிய தேர்வு முகமை நடத்துகிறது. இத்தேர்வுக்கான விண்ணப்பதிவு பிப்., 9ல் துவங்கியது.
துவக்கத்தில் ஆர்வம் குறைவாக இருந்த நிலையில், காலஅவகாசம் மார்ச், 16 வரை நீட்டிக்கப்பட்டதால், ஆர்வமுடன் மருத்துவ படிப்பு படிக்க பலரும் விண்ணப்பித்தனர்.
திருப்பூர் மாவட்டத்தில் தேர்வெழுத, 2,169 பேர் விண்ணப்பித்த நிலையில், இவர்களுக்கான ஹால்டிக்கெட், மே, 2ம் தேதி இரவு வெளியிடப்பட்டது. ஹால்டிக்கெட் பெற்றவர்கள் தங்களுக்கான தேர்வு மையங்களை அறிந்து கொண்டு, அதற்கேற்ப தயாராகி வருகின்றனர்.
தேர்வு நடக்கவுள்ள நான்கு மையங்களில், தடையில்லா மின்சாரம் வழங்குவது, மருத்துவம் மற்றும் சுகாதாரக்குழு, ஆம்புலன்ஸ் வசதி, போலீஸ் பாதுகாப்பு, வந்து செல்வதற்கான வசதிகள், சுகாதார ஏற்பாடு, தேர்வு மையத்துக்கு அருகே பெற்றோருக்கான காத்திருக்கும் இடம், வாகனம் நிறுத்துமிடம், உணவு மற்றும் குடிநீர் வசதி உள்ளிட்ட ஏற்பாடுகள் குறித்து ஆராயப்பட்டு, தேர்வு மையங்கள் தயார்படுத்தப்பட்டுள்ளது.
நீட் தேர்வு பணியில், ஈடுபட உள்ள அலுவலர்கள், ஊழியர் உட்பட, 126 பேருக்கு பணி ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
பயிற்சி வகுப்பு நிறைவு
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்த, 'நீட்' தேர்வுக்கு விண்ணப்பித்த, 589 மாணவ, மாணவியருக்கு ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி,கே.எஸ்.சி., அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, தாராபுரம், என்.சி.பி., ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, பல்லடம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி,ஆர்.கே.ஆர்., மேல்நிலைப்பள்ளி, உடுமலை பள்ளிகளில் மார்ச், 26 முதல் சிறப்பு வகுப்பு நடத்தப்பட்டது வந்தது.
கடந்த ஏப்ரல், 28ம் தேதி மாதிரி தேர்வு நடத்தப்பட்டது. நாளை(5ம் தேதி) தேர்வு நடக்கவுள்ள நிலையில், நேற்று முன்தினம் இவர்களுக்கான பயிற்சி வகுப்பு நிறைவு பெற்றது.