/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தபால் அலுவலகத்தில் கால்கடுக்க காத்திருப்பு 'கவுன்டர்' எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும்
/
தபால் அலுவலகத்தில் கால்கடுக்க காத்திருப்பு 'கவுன்டர்' எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும்
தபால் அலுவலகத்தில் கால்கடுக்க காத்திருப்பு 'கவுன்டர்' எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும்
தபால் அலுவலகத்தில் கால்கடுக்க காத்திருப்பு 'கவுன்டர்' எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும்
ADDED : மே 14, 2024 01:10 AM

அவிநாசி:அவிநாசி பழைய பஸ் ஸ்டாண்ட் அருகில் தபால் அலுவலகத்தில் பிக்சட் டெபாசிட், தனி நபர் சேமிப்பு கணக்கு, குழந்தைகளுக்கான சேமிப்பு திட்டங்கள், பார்சல் மற்றும் கூரியர் அனுப்புவது போன்ற வாடிக்கையாளர்களுக்கு பிரதான சேவைகள் வழங்கப்படுகின்றன.
ரங்கநாதபுரம் பகுதியிலும் முத்துச்செட்டிபாளையம் பிரிவிலும் உள்ள துணை தபால் நிலையங்களில் அந்தந்த பகுதி மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். பெரும்பாலும் அவிநாசி தபால் அலுவலகத்தையே அதிகளவில் பொதுமக்கள் பயன் படுத்துகின்றனர்.
குறிப்பாக பணம் எடுப்பது, சேமிப்புக் கணக்கில் வரவு வைப்பது, ஆண் மற்றும் பெண் குழந்தைகளுக்கான சேமிப்புத் திட்டங்கள் போன்றவற்றில் பணம் போடுவது, பார்சல் அனுப்புவது என நாள்தோறும் நுாற்றுக்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர்.
இதில் மாதந்தோறும் ஒன்றாம் தேதி முதல் 15ம் தேதி வரை வாடிக்கையாளர்கள் தங்களுடைய கணக்கில் வரவு வைப்பதும், சேமிப்பு கணக்கில் பணம் போடுவது உள்ளிட்ட பரிவர்த்தனைகளுக்காக அதிக அளவில் வருகின்றனர்.
ஆனால், பணம் எடுக்கும் கவுன்டரில் ஒருவர் மட்டுமே உள்ளதால் அதிக நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்படுகின்றது. இதனால் வேலைக்கு செல்வோர் பாதிப்படைகின்றனர்.
ராயம்பாளையத்தை சேர்ந்த வெங்கடேச பிரபு கூறுகையில், ''அவிநாசி தபால் அலுவலகத்தில், தங்கமகள் சேமிப்புத் திட்டத்தில் கடந்த ஒரு சில ஆண்டுகளாக பணம் செலுத்தி வருகிறேன். முன்பெல்லாம் அதிகபட்சமாக 10 முதல் 15 நிமிடம் காத்திருந்தால் பண பரிவர்த்தனை முடிந்து வேலைக்குச் சென்று விடுவேன். ஆனால், தற்போது 2 மணி நேரமாகிறது. குறிப்பிட்ட நாட்கள் வரையாவது இரண்டு கவுன்டர் அமைத்து சேவையாற்ற வேண்டும்,'' என்றார்.
இப்பிரச்னை குறித்து, துணை தபால் அலுவலர் ஐஸ்வர்யாவிடம் கேட்டதற்கு, ''துணை தபால் நிலையமாக இருப்பதால் ஒரு கவுன்டர் மட்டுமே அமைக்க முடியும். போஸ்டல் ஏஜென்ட்கள் மதிய நேரம் மட்டுமே தங்களுடைய பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. தலைமை தபால் அலு வலகத்தின் விதிமுறைகளின் கீழ் பண பரிவர்த்தனைக்கான கவுன்டரில் ஒரு நபர் மட்டுமே நியமிக்கப்படுவார்,'' என்றார்.

