/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பயனாளிகள் பட்டியலில் குளறுபடி :ஊராட்சி அலுவலகம் முற்றுகை
/
பயனாளிகள் பட்டியலில் குளறுபடி :ஊராட்சி அலுவலகம் முற்றுகை
பயனாளிகள் பட்டியலில் குளறுபடி :ஊராட்சி அலுவலகம் முற்றுகை
பயனாளிகள் பட்டியலில் குளறுபடி :ஊராட்சி அலுவலகம் முற்றுகை
ADDED : மே 30, 2024 11:51 PM

உடுமலை;தொகுப்பு வீடு பராமரிப்பு திட்ட பயனாளிகள் பட்டியலில், குளறுபடி உள்ளதாக கொண்டம்பட்டி ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு மக்கள் போராட்டத்தில், ஈடுபட்டனர்.
குடிமங்கலம் ஒன்றியம், கொண்டம்பட்டி ஊராட்சியில், சனுப்பட்டி, வல்லக்குண்டாபுரம், கொண்டம்பட்டி உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன.
கிராமங்களில், பல ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட தொகுப்பு வீடுகள் பராமரிப்பு இல்லாமல், இடியும் நிலையில் உள்ளது. இந்த வீடுகளை அரசு நிதியில் பராமரிக்க வேண்டும் என, அரசுக்கு மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
தற்போது, குடிமங்கலம் ஒன்றிய நிர்வாகம் வாயிலாக, பராமரிப்பில்லாத தொகுப்பு வீடுகளை பராமரிக்கும் திட்டத்துக்கு, பயனாளிகள் தேர்வு செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கொண்டம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட கிராமங்களில், பயனாளிகள் பட்டியல் தேர்வில் பல்வேறு குளறுபடிகள் நடந்ததாக புகார் எழுந்தது.
இந்நிலையில், நேற்று கொண்டம்பட்டி ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, 'தொகுப்பு வீடு பராமரிப்பு திட்டத்தில் பயனாளிகள் பட்டியல் பாரபட்சமாக தயாரிக்கப்பட்டுள்ளது. பராமரிப்பின்றி வீடுகள் இடியும் நிலையில் உள்ளவர்கள் பெயர் பட்டியலில் இடம் பெறவில்லை. முறையாக ஆய்வு செய்து, பயனாளிகளை தேர்வு செய்ய வேண்டும்,' என மக்கள் வலியுறுத்தினர்.
ஊராட்சி நிர்வாகம் தரப்பில், 'பட்டியலில் விடுபட்டவர்கள் பெயர் சேர்க்கப்பட்டு, நிதி ஒதுக்கீடு செய்யப்படும்,' என உறுதியளித்ததால், போராட்டத்தை கைவிட்டு மக்கள் திரும்பிச்சென்றனர்.