/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அரசு மருத்துவமனையில் கூடுதல் கட்டடம் ஜல்லிபட்டி மக்கள் மகிழ்ச்சி
/
அரசு மருத்துவமனையில் கூடுதல் கட்டடம் ஜல்லிபட்டி மக்கள் மகிழ்ச்சி
அரசு மருத்துவமனையில் கூடுதல் கட்டடம் ஜல்லிபட்டி மக்கள் மகிழ்ச்சி
அரசு மருத்துவமனையில் கூடுதல் கட்டடம் ஜல்லிபட்டி மக்கள் மகிழ்ச்சி
ADDED : செப் 02, 2024 02:16 AM

உடுமலை;உடுமலை அருகே ஜல்லிபட்டியில், 1955ல், அரசு மருத்துவமனை துவக்கப்பட்டது. படிப்படியாக மருத்துவமனை தரம் உயர்த்தப்பட்டாலும், போதிய வசதிகள் இல்லாமல், சுற்றுப்பகுதியைச்சேர்ந்த மக்கள் பாதித்து வந்தனர்.
குறிப்பாக போதிய படுக்கை வசதி இல்லாதது மற்றும் அவசர சிகிச்சை பிரிவு இல்லாமல், அருகிலுள்ள மலைவாழ் கிராம மக்களும் பாதிக்கப்பட்டனர்.
எனவே அரசு மருத்துவமனையில் தேவையான வசதிகளை மேம்படுத்த வேண்டும் என, நீண்ட காலமாக கோரிக்கை விடப்பட்டு வந்தது.
இந்நிலையில், தி.மு.க., அரசு பொறுப்பேற்றதும், தொகுதிக்கு, 10 கோரிக்கை என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தி, சம்பந்தப்பட்ட எம்.எல்.ஏ.,க்களிடம் தொகுதிக்கான கோரிக்கைகள் பெறப்பட்டது.
இத்திட்டத்தில், மடத்துக்குளம் எம்.எல்.ஏ., மகேந்திரன் சார்பில், மடத்துக்குளத்தில் தீயணைப்பு நிலையம் தேவை, ஜல்லிபட்டி அரசு மருத்துமனை மேம்பாடு உள்ளிட்ட கோரிக்கைகள் வழங்கப்பட்டது.
இதன் அடிப்படையில், தமிழக அரசு, ஜல்லிபட்டி அரசு மருத்துவமனையில் மேம்பாட்டு பணிகளை மேற்கொள்ள, 5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தது. நிதியில், 9,634 சதுர அடி பரப்பளவில், அவசர சிகிச்சை பிரிவு, 32 படுக்கை வசதி, இ.சி.ஜி., எக்ஸ்ரே அறை உள்ளிட்ட வசதிகளுடன் கூடிய புதிய கட்டடம் கட்டும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இப்பணிகளை நேற்று, மடத்துக்குளம் எம்.எல்.ஏ., மகேந்திரன் மற்றும் பொதுப்பணித்துறை (கட்டடம்) பிரிவு அதிகாரிகளும் ஆய்வு செய்தனர். நீண்ட கால கோரிக்கை நிறைவேறி வருவதற்கு, ஜல்லிபட்டி சுற்றுப்பகுதி மக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.