/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
குழாய் பதிக்க தோண்டிய குழி சரக்கு வேன் சாய்ந்து அவதி
/
குழாய் பதிக்க தோண்டிய குழி சரக்கு வேன் சாய்ந்து அவதி
குழாய் பதிக்க தோண்டிய குழி சரக்கு வேன் சாய்ந்து அவதி
குழாய் பதிக்க தோண்டிய குழி சரக்கு வேன் சாய்ந்து அவதி
ADDED : மே 30, 2024 12:41 AM

திருப்பூர்: வீரபாண்டி பகுதியில் குழாய் பதிக்க தோண்டிய குழியில் சரக்கு வேன் சக்கரங்கள் இறங்கி சிக்கியதால், பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பூர் பல்லடம் ரோட்டையும், தாராபுரம் ரோட்டையும் இணைக்கும் வகையில், வீரபாண்டி வழியாக ரிங் ரோடு அமைந்துள்ளது. இந்த ரிங் ரோட்டை விரிவாக்கம் செய்து சீரமைக்கும் பணியை நெடுஞ்சாலைத் துறையினர் மேற்கொண்டுள்ளனர்.
இப்பணி பெருமளவு நிறைவடையவுள்ள நிலையில், முழுமை பெறாமல் உள்ளது. இதனால் தினமும் பல்லாயிரம் வாகனங்கள் செல்வதில் பெரும் சிரமம் நிலவுகிறது.
ரோடு விரிவாக்கம் செய்யும் பணி முடிவடையும் நிலையில், குடிநீர் குழாய்கள் பதிக்கும் பணியை மாநகராட்சி ஒப்பந்தாரர் தரப்பு துவங்கியது. இதற்காக ரோட்டோரம் குழி தோண்டி பணி நடக்கிறது.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு அவ்வழியாக வந்த ஒரு சரக்கு வேன் ரோட்டோரம் குழி தோண்டப்பட்டது தெரியாமல், டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து குழிக்குள் இடது புற சக்கரங்கள் இறங்கியது. அந்த நிலையிலும் இந்த வாகனம் பல மீட்டர் துாரம் பயணித்து நின்றது.
நீண்ட போராட்டத்துக்குப் பின் குழியில் இறங்கிய வாகனம் மீட்கப்பட்டது. இதனால் அங்கு நீண்ட நேரம் பரபரப்பு நிலவியது.
இப்பகுதியில், குழாய் பதிப்பு பணியை விரைந்து முடித்து, ரோடு விரிவாக்கம் மற்றும் சீரமைப்பு மேற்கொள்ளப்பட வேண்டும்.