/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தக்காளி வரத்து குறைந்தும் விலை உயரவில்லை
/
தக்காளி வரத்து குறைந்தும் விலை உயரவில்லை
ADDED : மே 01, 2024 12:27 AM

உடுமலை;பருவ மழைகள் ஏமாற்றி வருவதால், உடுமலை சுற்றுப்பகுதிகளில் கடும் வறட்சி நிலை காணப்படுகிறது.
இதனால், தக்காளி சாகுபடி பெருமளவு குறைந்துள்ளது. கிணற்று நீரை ஆதாரமாகக்கொண்டு, ஒரு சில பகுதிகளில் மட்டும் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
கடுமையாக வெயில் காரணமாக, தக்காளி செடிகள் பாதித்தும், காய்கள் சிறுத்தும், மகசூல் பெருமளவு குறைந்துள்ளது.
இதனால், உடுமலை சந்தைக்கு தக்காளி வரத்து குறைந்துள்ளது. இருப்பினும், விலை உயராததால், விவசாயிகள் பாதித்துள்ளனர். நேற்று, 14 கிலோ கொண்ட ஒரு பெட்டி தக்காளி, 250 முதல், 350 மட்டுமே விற்று வருகிறது.
விவசாயிகள் கூறியதாவது: வரத்து குறைவு காரணமாக, கூடுதல் விலை கிடைக்கும் என எதிர்பார்த்திருந்த நிலையில், தரமற்ற பழங்கள், வெயிலுக்கு தாங்காதது உள்ளிட்ட காரணங்களினால், வெளி மாவட்ட வியாபாரிகள் வரத்து குறைந்துள்ளது.
உள்ளூர் வியாபாரிகள் மட்டும் கொள்முதல் செய்வதால், விலை உயராமல் உள்ளது. கடுமையான வறட்சி, நீர்ப்பற்றாக்குறையிலும், தக்காளி சாகுபடி செய்தும், விலையில்லாததால் நஷ்டமே ஏற்படுகிறது.
இவ்வாறு, தெரிவித்தனர்.