/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தள்ளாடும் கால்வாய் பாலங்கள் புதுப்பிப்பது அவசியம்
/
தள்ளாடும் கால்வாய் பாலங்கள் புதுப்பிப்பது அவசியம்
ADDED : ஆக 29, 2024 10:08 PM
உடுமலை : பாசன கால்வாய்கள் மீது கட்டப்பட்ட பாலங்கள், உறுதியிழந்து தள்ளாவடுவது குறித்து பொதுப்பணித்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறையினர் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
உடுமலை பகுதியில், தேசிய, மாநில நெடுஞ்சாலை, மாவட்ட முக்கிய, இதர ரோடுகள் மற்றும் கிராமப்புற ரோடுகளின் குறுக்கே, பாசன கால்வாய்கள் அமைந்துள்ளன.
குறிப்பாக, பி.ஏ.பி., பாசன திட்டத்தின் பிரதான, கிளை மற்றும் பகிர்மான கால்வாய்கள், ரோடுகளில், குறுக்கிடும் இடத்தில், பாலங்கள் கட்டப்பட்டுள்ளன.
ஆனால், இப்பாலங்கள் பாசன திட்டம் செயல்பாட்டுக்கு வந்த போது, அப்போதிருந்த, ரோட்டின் அகலத்துக்கேற்ப கட்டப்பட்டவையாகும்.
அதன்பின்னர், ரோடுகள் பல மடங்கு விரிவுபடுத்தப்பட்ட பிறகும், பாலங்கள் அதற்கேற்ப மேம்படுத்தப்படவில்லை.
தேசிய நெடுஞ்சாலையில் அதிக விபத்துகள் ஏற்பட்ட பிறகு, எஸ்.வி., மில் கால்வாய்பாலம் உட்பட சில பாலங்கள், நீண்ட இழுபறிக்கு பிறகு, விரிவாக்கப்பட்டது. ஆனால், கிராமப்புற ரோடுகளில், இப்பாலங்களை இரு துறையினரும் கண்டுகொள்வதில்லை.
தடுப்புச்சுவர் இடிந்தும், குறுகலான பகுதியில், தொடர் விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. வாகன ஓட்டுநர்கள் அச்சத்துடன் பாலத்தை கடக்க வேண்டியுள்ளது.
பி.ஏ.பி., பூலாங்கிணறு, புதுப்பாளையம், உடுமலை ஆகிய கால்வாய்களின் குறுக்கே, மேம்படுத்தப்படாமல், 25க்கும் மேற்பட்ட பாலங்கள் உள்ளன. ஒன்றிய ரோடுகளிலுள்ள, பாலங்களிலும், இதே நிலை காணப்படுகிறது.
விபத்துகளை குறைக்க, ரோட்டின் அகலத்துக்கேற்ப, பாலங்களை விரிவுபடுத்த வேண்டும். உடனடி நடவடிக்கையாக சேதமடைந்துள்ள தடுப்பு சுவர்களையாவது சீரமைக்க பொதுப்பணித்துறையினர், ஊரக வளர்ச்சித்துறையினர் ஒருங்கிணைந்து பணிகளை துவக்க வேண்டும்.