/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
குப்பைக்கிடங்காக மாறிய சாலை... வாகனம் நிறுத்த தடுமாறும் வேளை
/
குப்பைக்கிடங்காக மாறிய சாலை... வாகனம் நிறுத்த தடுமாறும் வேளை
குப்பைக்கிடங்காக மாறிய சாலை... வாகனம் நிறுத்த தடுமாறும் வேளை
குப்பைக்கிடங்காக மாறிய சாலை... வாகனம் நிறுத்த தடுமாறும் வேளை
ADDED : செப் 09, 2024 12:22 AM

இருள் சூழ் வீதி
ராயபுரம், பெத்திச்செட்டிபுரம், 2வது வீதியில், தெருவிளக்கு பொருத்த வேண்டும். மின்கம்பங்களில் தெருவிளக்கு இல்லாமல் இருள்சூழ்ந்து காணப்படுகிறது.
- கற்பகம், பெத்திச்செட்டிபுரம்.
வீணாகும் தண்ணீர்
திருப்பூர் வடக்கு, முதல் வார்டு, மூன்றாவது குடிநீர் திட்ட மேல்நிலை நீர்தேக்க தொட்டி அருகே குழாய் உடைந்து தண்ணீர் வீணாகிறது.
- மனோகரன், அண்ணா காலனி. (படம் உண்டு)
அவிநாசி, சீனிவாசபுரம், எல்.ஐ.சி., அலுவலகம் எதிரே அடிக்கடி அத்திக்கடவு திட்ட குழாய் உடைந்து தண்ணீர் வீணாகிறது.
- செந்தில், சீனிவாசபுரம். (படம் உண்டு)
திருப்பூர், 15 வேலம்பாளையம், ஜவஹர் நகரில் குழாய் உடைந்து தண்ணீர் வீணாகி, சாலை சேதமாகிறது. குழாய் உடைப்பை சீரமைக்க வேண்டும்.
- வேலுமணி, ஜவஹர் நகர். (படம் உண்டு)
மின் விபத்து அபாயம்
அவிநாசி, பழங்கரை, ஆயிக்கவுண்டன்பாளையம் காலனியில் மின் கம்பத்தை சுற்றி, செடிகள் படர்ந்துள்ளது. மின்விபத்து ஏற்படும் முன் அகற்ற வேண்டும்.
- ஜெகன், ஆயிக்கவுண்டன்பாளையம் காலனி. (படம் உண்டு)
தெருநாய்த் தொல்லை
அவிநாசி, தெக்கலுாரில் அதிகளவில் தெருநாய்கள் சுற்றித்திரிகின்றன. நாய்களை பிடிக்கும் நடவடிக்கையை ஊராட்சி மேற்கொள்வதில்லை.
- சண்முகம், தெக்கலுார். (படம் உண்டு)
சாலை சேதம்
திருப்பூர், தாராபுரம் ரோடு, கரட்டாங்காடு - பெரிச்சிபாளையம் சந்திப்பு சாலையில் குழாய் உடைந்து தண்ணீர் வீணாகி, சாலை சேதமாகியுள்ளது. 'பேட்ஜ்ஒர்க்' மேற்கொள்ள வேண்டும்.
- மணிகண்டன், கரட்டாங்காடு. (படம் உண்டு)
ஒளிராத விளக்கு
போயம்பாளையம், அரசு பள்ளி பின்புற வீதியில் தெருவிளக்கு எரிவதில்லை. எரியாத விளக்கை மாற்றி, புதுவிளக்கு பொருத்த வேண்டும்.
- நிஷாந்த், போயம்பாளையம். (படம் உண்டு)
மின் கம்பம் சாயும்
திருப்பூர், செங்குந்தபுரம், ஆறாவது வீதியில் சிமென்ட் பூச்சு விழுந்து கம்பி தெரிவதால், மின்கம்பம் விழும் நிலைக்கு மாறியுள்ளது. கம்பத்தை மாற்ற வேண்டும்.
- அருண், செங்குந்தபுரம். (படம் உண்டு)
ரோட்டில் குப்பைவீச்சு
திருப்பூர் பூ மார்க்கெட் பின்புற வீதியில் குப்பைத்தொட்டி வைக்க வேண்டும். குப்பைகளை ரோட்டிலேயே வீசியெறிவதால், வாகனங்கள் நிறுத்த இடமிருப்பதில்லை.
- ராஜசேகர், ஈஸ்வரன் கோவில் வீதி. (படம் உண்டு)
இப்படி சிந்தலாமா?
திருப்பூர், கருமாரம்பாளையம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி எதிரே, ரேஷன் கடை உள்ளது. ரேஷன் கார்டுதாரர்களுக்கு அரிசி வழங்கும் போது பாதியை கீழே சிந்தி விடுகின்றனர்.
- சந்தோஷ்குமார், கருமாரம்பாளையம். (படம் உண்டு)
ரியாக் ஷன்
குழாய் சீரமைப்பு
திருப்பூர், ஜெய்வாபாய் ஸ்கூல் ரோடு, குமரன் வணிக வளாகம் அருகே குழாய் உடைந்து தண்ணீர் வீணானது. 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியானவுடன் மாநகராட்சி மூலம் சீரமைக்கப்பட்டது.
- சத்யன், குமரன் ரோடு. (படம் உண்டு)
வாகனங்கள் அகற்றம்
திருப்பூர், 56வது வார்டு, சூர்யா நகர் ஓடை ரோட்டை ஆக்கிரமித்து கனரக வாகனங்கள் நிறுத்தப்பட்டன. 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியானதும், வாகனங்கள் இடம் மாற்றப்பட்டுள்ளன.
- சுரேஷ், சூர்யா நகர். (படம் உண்டு)