/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பழிக்கு பழியாக ரவுடி கொலை தலையை சிதைத்து பயங்கரம்
/
பழிக்கு பழியாக ரவுடி கொலை தலையை சிதைத்து பயங்கரம்
பழிக்கு பழியாக ரவுடி கொலை தலையை சிதைத்து பயங்கரம்
பழிக்கு பழியாக ரவுடி கொலை தலையை சிதைத்து பயங்கரம்
ADDED : ஆக 09, 2024 02:45 AM

பல்லடம்,:திருப்பூர் மாவட்டம், கரையாம்புதுார் பகுதியில் நேற்று காலை, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் காரில் வந்த ஐந்து பேர், பல்லடம் - திருப்பூர் ரோடு, கரையாம்புதுார் பகுதியில் சென்று கொண்டிருந்த வினோத் கண்ணன் என்பவரை துரத்திச் சென்று, சரமாரியாக வெட்டிக் கொலை செய்தனர்.
தலையை முழுதுமாக சிதைத்த கும்பல், இடது கையையும் துண்டாக்கியது.
இந்த படுகொலை குறித்து போலீசார் கூறியதாவது:
வினோத் கண்ணனின் மனைவி மற்றும் குடும்பத்தினர் திருப்பதியில் உள்ளனர். வினோத் கண்ணன், திருப்பதியில் இருந்து நேற்று நண்பர் பொன்னையாவுடன் திருப்பூர் வந்தார்.
கரையாம்புதுார் பகுதியில் வினோத் கண்ணனும், பொன்னையாவும் வந்தபோது, காரில் வந்த கும்பல், வினோத் கண்ணனை கொலை செய்தது; பொன்னையா தப்பி விட்டார்.
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை, ஆலங்காடு பகுதியைச் சேர்ந்தவர் அக்னிராஜ், 19. இவரை, 2021 மார்ச் 5ல் மைனர் மணி ஆதரவாளர்கள் வெட்டிக் கொலை செய்தனர். இதற்கு பழிவாங்க அக்னிராஜின் நண்பர்கள், மைனர் மணி உள்ளிட்ட மூவரை அடுத்தடுத்து தலையைச் சிதைத்து வெட்டிக் கொலை செய்தனர்.
மைனர் மணி கொல்லப்பட்டபோது, வினோத் கண்ணனும் வெட்டப்பட்டார். வினோத் கண்ணனுக்கும் கொலையில் தொடர்பு இருக்கும் என்று கருதி, அவரை அந்த கும்பல் நேற்று தலையை சிதைத்து படுகொலை செய்தது.
இவ்வாறு கூறினர்.