/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கொழுந்து விட்டெழுகிறது 'தற்சார்பு' முழக்கம்! சொல்லில் அல்ல... செயலிலும் சாதித்தாக வேண்டும் புதிய களம் நோக்கி பின்னலாடை நகரம் அமர்க்களம்
/
கொழுந்து விட்டெழுகிறது 'தற்சார்பு' முழக்கம்! சொல்லில் அல்ல... செயலிலும் சாதித்தாக வேண்டும் புதிய களம் நோக்கி பின்னலாடை நகரம் அமர்க்களம்
கொழுந்து விட்டெழுகிறது 'தற்சார்பு' முழக்கம்! சொல்லில் அல்ல... செயலிலும் சாதித்தாக வேண்டும் புதிய களம் நோக்கி பின்னலாடை நகரம் அமர்க்களம்
கொழுந்து விட்டெழுகிறது 'தற்சார்பு' முழக்கம்! சொல்லில் அல்ல... செயலிலும் சாதித்தாக வேண்டும் புதிய களம் நோக்கி பின்னலாடை நகரம் அமர்க்களம்
ADDED : ஏப் 27, 2024 12:42 AM
துாவப்பட்ட விதை
திருப்பூர் பின்னலாடை தொழில்துறையினர், தொழில்நுட்ப ஜவுளி உற்பத்தியிலும் கால் பதிக்க வேண்டும் என, தமிழக ஜவுளித்துறை கமிஷனர் வள்ளலார், கடந்தாண்டு நவ., மாதம், திருப்பூர் ஏற்றுமதியாளர்களை அறிவுறுத்தினார்; 'திருப்பூரின் சாதனைகளை உலகத்துக்கு தெரியப்படுத்துங்கள்' என்றும் ஊக்கப்படுத்தினார்.
அப்போதுதான், கோவையில் உள்ள முன்னணி தொழில்நுட்ப கல்லுாரிகளுடன் இணைந்து, இயந்திர உதிரி பாகம் மற்றும் புதிய தொழில்நுட்பங்களை கண்டறிவது என்ற முயற்சிக்கு விதை துாவப்பட்டது. அது, படிப்படியாக வளர்ந்து, திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கம், 'இயந்திர உதிரிபாகங்கள் தயாரிப்பு முன்முயற்சி துணைக்குழுவை உருவாக்கியுள்ளது.
திருப்பூரில் உள்ள, 'நிட்டிங்', சாய ஆலைகள், 'காம்பாக்டிங்', 'ரெய்சிங்', எம்ப்ராய்டரிங், பிரின்டிங் என, அனைத்து வகை பிரிவுகளிலும், இறக்குமதி செய்த இயந்திரங்கள் அதிகளவு பயன்படுத்தப்படுகின்றன. ஒவ்வொரு இறக்குமதி இயந்திரத்துக்கும் தேவையான உதிரி பாகங்களும், வெளிநாடுகளில் இருந்தே வரவழைக்கப்படுகின்றன.
கோவையில் உள்ள, 'கொடிசியா', பி.எஸ்.ஜி., தொழில்நுட்ப கல்லுாரி, தென்னிந்திய ஜவுளி ஆராய்ச்சி கழகத்துடன் கரம்கோர்த்து, தேவையான உதிரி பாகங்களை, கோவையிலேயே தயாரிக்கலாம் என உத்தேசிக்கப்பட்டுள்ளது. இதற்கு முத்தாய்ப்பாக முதல்கட்ட ஆலோசனை கூட்டம், திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தில் நடந்தது.
உதிரிபாகங்கள்கண்காட்சி
கோவையில் இருந்து, உலகம் முழுவதும் இயந்திரங்களும், உதிரி பாகங்களும் ஏற்றுமதியாகின்றன. கோவை நிறுவனங்களை பயன்படுத்திக்கொண்டால், கோவைக்கு புதிய வர்த்தக வாய்ப்பு கிடைக்கும்; திருப்பூரின் தேவைகளும் பூர்த்தியாகும். அதற்காகவே, 'கொடிசியா' அமைப்புடன் கரம்கோர்த்து, முன்னணி தொழில்நுட்ப கல்லுாரிகள், நிறுவனங்கள் உதவியுடன், உதிரி பாகம், இயந்திர வடிவமைப்பு துவக்கப்படும்.
கொடிசியாவை பொறுத்தவரை, சில மாதங்களாக, ராணுவத்துக்கு தேவையான உதிரி பாகங்களையே உற்பத்தி செய்யும் அளவுக்கு உயர்ந்துள்ளது. சிறப்பான உட்கட்டமைப்பு வசதியும் இருப்பதால், திருப்பூருக்கு தேவையான இயந்திரங்களையும் சிறப்பாக உருவாக்க முடியும்.
'நிட்டிங்', 'டையிங்' உட்பட, திருப்பூரின் அனைத்து தொழில் பிரிவுகளும், அதிகம் பயன்படுத்தம், அத்தியாவசிய உதிரி பாகங்கள் கண்காட்சியை, மூன்று வாரத்துக்குள், கொடிசியாவில் நடத்த வேண்டும். கோவை தொழில்துறையினர் பார்வையிட்ட, அவற்றை உள்ளூரிலேயே தயாரிக்கும் முயற்சியை துவக்கலாம் என, முடிவு செய்யப்பட்டுள்ளது.
'ேஹக்கத்தான்' போட்டி
பி.எஸ்.ஜி., தொழில்நுட்ப கல்லுாரியின் தொழில்துறை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத்துறை தலைவர் டாக்டர் கந்தசாமி, ஸ்ரீஈஸ்வர் தொழில்நுட்ப கல்லுாரியின் இயந்திரவியல் துறைத்தலைவர் சுரேஷ்குமார் ஆகியோர், தங்கள் ஆலோசனை வழங்கியுள்ளனர்.
கல்லுாரி மாணவர்களிடம், தொழிற்சாலைகள் எதிர்கொள்ளக்கூடிய உற்பத்தி சார்ந்த பிரச்னைகளை குறிப்பிட்டு, அதற்கான தீர்வு காண முயற்சிக்கப்படும். அதற்காக, புதிய கோணத்தில், 'ேஹக்கத்தான்' போட்டிகள் நடத்தி, சிறப்பான ஆலோசனைகளும், தீர்வுகளும், நடைமுறைக்கு ஏற்கப்படும். உதிரி பாகம் தயாரிப்பும் ஊக்குவிக்கப்படும்.
இயந்திரம் மற்றும் உதிரி பாகம் தயாரிக்கும் முயற்சியில், கோவை, திருப்பூர், ஈரோடு உட்பட, தமிழகம் முழுவதும் உள்ள கல்லுாரிகள், தொழில் நிறுவனங்கள், திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தை அணுகலாம்; உதிரிபாகம் தயாரிப்பு தொடர்பான பணிகளை கவனிக்க, பிரத்யேக குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.

