/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மஹா பெரியவர் வரலாற்றை விவரிக்கும் 'தெய்வத்துள் தெய்வம்' மேடை நாடகம் திருப்பூரில், 15ம் தேதி நடக்கிறது

ADDED : செப் 11, 2024 01:19 AM
திருப்பூர்:காஞ்சி மஹா பெரியவரின் வாழ்க்கை வரலாற்றை விவரிக்கும், 'தெய்வத்துள் தெய்வம்' என்ற மேடை நாடக நிகழ்ச்சி, 15 ம் தேதி திருப்பூரில் நடக்கிறது.
ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடத்தின், 68வது பீடாதிபதியும், பக்தர்களால் 'மஹா பெரியவா' என்று பக்தியுடன் அழைக்கப்படும், ஸ்ரீசந்திரசேகர சரஸ்வதி சுவாமிகளின் வாழ்க்கை வரலாற்றை விளக்கும், 'தெய்வத்துள் தெய்வம்' என்ற மேடை நாடகம், ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடத்தில் ஆச்சார்ய சுவாமிகளின் ஒப்புதலுடன், திருப்பூரில், 15ம் தேதி நடைபெற உள்ளது.
திருப்பூர், அவிநாசி ரோடு, காந்தி நகர் ஏ.வி.பி., பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள, உள் அரங்கில், 15ம் தேதி மாலை, 6:30 மணிக்கு இந்த நாடகம் நடக்க உள்ளது. நவீன ஒலி, ஒளி அமைப்புடன், நாட்டின் பல பகுதிகளிலும், சிங்கப்பூரிலும், 46 முறை ஏற்கனவே அரங்கேறி உள்ளது.
இந்த நாடகத்தில், ஸ்ரீமஹா பெரியவரின் அவதாரத்தில் இருந்து, அவரை முக்தி காலம் வரை, 100 ஆண்டுகால நிகழ்ச்சிகள், தத்ரூபமாக கண்முன்னே நிறுத்தப்பட உள்ளது. நாடகத்துக்கு அனுமதி இலவசம். சிட்டி யூனியன் வங்கி, திருப்பூர், வீரபாண்டி, பெருமாநல்லுார் கிளைகள் மற்றும் திருப்பூர் ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடத்தின் கிளையில், 63816 83335, 99949 36623, 98432 49552 என்ற எண்களில் தொடர்புகொண்டும், அனுமதி சீட்டுகளை பெற்றுக் கொள்ளலாம்.