sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

ஸ்ரீகுமரன் மருத்துவமனையில் அதிநவீன இருதய சிகிச்சை மையம் 30 ஆண்டுகளாக நோயாளிகள் நலன் காக்கிறது

/

ஸ்ரீகுமரன் மருத்துவமனையில் அதிநவீன இருதய சிகிச்சை மையம் 30 ஆண்டுகளாக நோயாளிகள் நலன் காக்கிறது

ஸ்ரீகுமரன் மருத்துவமனையில் அதிநவீன இருதய சிகிச்சை மையம் 30 ஆண்டுகளாக நோயாளிகள் நலன் காக்கிறது

ஸ்ரீகுமரன் மருத்துவமனையில் அதிநவீன இருதய சிகிச்சை மையம் 30 ஆண்டுகளாக நோயாளிகள் நலன் காக்கிறது


ADDED : ஜூன் 30, 2024 11:15 PM

Google News

ADDED : ஜூன் 30, 2024 11:15 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர் ஸ்ரீகுமரன் மருத்துவமனை, 30 ஆண்டுகளாக சிறப்பான மருத்துவ சேவை அளித்து வருகிறது. விஷமுறிவு, விபத்து, அவசர தலைக்காயம் மற்றும் தீவிர சிகிச்சை, மூச்சுத்திணறல், பக்கவாதம், மாரடைப்பு உட்பட அனைத்து பாதிப்புகளுக்கும் அதிநவீன கருவிகளை கொண்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

உலகத் தரம்

மருத்துவமனையில், அதிநவீன ேஹத்லேப், பைப்பாஸ் அறுவை சிகிச்சை அரங்கு துவங்கப்பட்டுள்ளது. 'ஸ்டென்ட்' பொருத்துதல், ஆஞ்சியோ, 'பிளாஸ்டி பேஸ் மேக்கர்' பொருத்துதல், ஆஞ்சியோகிராம், பைபாஸ் அறுவை சிகிச்சைகள் உலக தரத்துடன் அளிக்கப்படுகிறது.

'கோல்டன் ஹவர்' எனப்படும் நேரத்தில் விரைவில் சிகிச்சை அளிக்கப்பட வேண்டும். இருதயத்தில் வலி, வியர்வை கொட்டுதல், ரத்த அழுத்தம் அதிகரிப்பை உணர்ந்தால், உடனடியாக அருகே உள்ள மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

லட்சம் பேருக்கு

இருதய சிகிச்சை

இதுகுறித்து ஸ்ரீகுமரன் மருத்துவமனை நிர்வாக இயக்குனர் டாக்டர் செந்தில்குமரன் கூறியதாவது:

ஸ்ரீகுமரன் மருத்துவமனையில், இரண்டு சிறப்பு நிலை நிபுணர்களுடன், 24 மணி நேரமும் இருதய நோய் சிகிச்சை பிரிவு செயல்படுகிறது. லேசான பாதிப்பு ஏற்பட்டதும் பரிசோதனை செய்துகொண்டால், முதல்கட்ட சிகிச்சையிலேயே குணப்படுத்திவிடலாம்.

மருத்துவமனையில் இதுவரை, 700 பேருக்கு மேல் ஆஞ்சியோகிராம் செய்யப்பட்டுள்ளது; அவர்களில், 300க்கும் அதிகமானவர்களுக்கு, ஆஞ்சியோ பிளாஸ்டி சிகிச்சை அளித்து நலமாக உள்ளனர். ஒரு லட்சம் பேருக்கு, இருதய நோய் தொடர்பான சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

திருப்பூரில் முதன்முதலாக, அதிநவீன தீவிர சிகிச்சை பிரிவு மற்றும் உலகத்தரம் வாய்ந்த பைபாஸ் அறுவை சிகிச்சை அரங்கம் திறக்கப்பட்டுள்ளது. புற்றுநோய் பாதிப்பும் அதிகரித்து வருவதால், புற்றுநோய் அறுவை சிகிச்சை நிபுணர், கதிரியக்க நிபுணர்கள், ஹீமோதெரபி அளிக்கும் நிபுணர்கள், அடையார் புற்றுநோய் ஆராய்ச்சி மையத்தில் பயிற்சி முடித்து, கடந்த ஐந்து ஆண்டுகளாக, குமரன் மருத்துவமனையில் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

மார்பக கட்டி, ஆண்களுக்கு சிறுநீர் கழிக்கும் போது பிரச்னை, தொண்டை வலி, அதிகப்படியான எடை இழப்பு, அதிகமான சோர்வு போன்ற அறிகுறிகள் இருந்தால், புற்றுநோய் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். அதற்கான வசதி, மருத்துவமனையில் செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு, அவர்கள் கூறினர்.






      Dinamalar
      Follow us