/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கொங்கு வேளாளர் பள்ளி மாணவ, மாணவியர் அபாரம்
/
கொங்கு வேளாளர் பள்ளி மாணவ, மாணவியர் அபாரம்
ADDED : ஆக 22, 2024 12:35 AM

திருப்பூர் : திருப்பூர் அங்கேரிபாளையம் ரோட்டில் உள்ள கொங்கு வேளாளர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவியர், ஜான்சன் தொழில்நுட்பக்கல்லுாரியில் நடந்த 'பள்ளி அளவிலான ஸ்டார்ட் அப்' போட்டியில் பங்கேற்றனர். போட்டியில் பள்ளி ஏழாம் வகுப்பு மாணவியர் ஜெயஸ்ரீ, கமலி முதல் பரிசும், அக்ஷயா, பிரித்திக் மூன்றாம் பரிசும், பத்தாம் வகுப்பு மாணவர்கள் ஜெயகார்த்திகேயன், தருண்பிரபு ஆறுதல் பரிசும் பெற்றனர். இவர்கள் இளம் விஞ்ஞானி விருது மற்றும் சான்றிதழ்களையும் பெற்றனர்.
அறக்கட்டளை தலைவர் பெஸ்ட் ராமசாமி, உப தலைவர்கள் முருகசாமி, டிக்சன் குப்புசாமி, செயலாளர் கீதாஞ்சலி கோவிந்தப்பன், பொருளாளர் கந்தசாமி, இணைச்செயலாளர் துரைசாமி, பள்ளி முதல்வர் சுமதி உள்ளிட்டோர் இவர்களைப் பாராட்டினர்.