/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மண் அள்ளிய லாரிகளை பிடித்த தாசில்தார்
/
மண் அள்ளிய லாரிகளை பிடித்த தாசில்தார்
ADDED : மே 30, 2024 12:45 AM

திருப்பூர் : குண்டடம், ஜோத்தியம்பட்டியில் தனியார் தோட்டத்தில் முறைகேடாக கிரவல் மண் எடுத்து விற்பனை செய்யப்பட்டு வந்தது.
இதுதொடர்பாக அதிகாரிகளுக்கு தகவல் சென்ற நிலையில் மவுனமாக இருந்து வந்தனர். கிராம மக்கள் தரப்பில் இருந்து தொடர்ச்சியாக புகார் சென்று வந்த நிலையில், தாராபுரம் தாசில்தார் கோவிந்தசாமி தலைமையிலான அதிகாரிகள் மண் எடுத்து வந்த இடத்துக்கு சென்றனர். உடனே, மண் அள்ளிய கும்பல் தப்பி சென்றது.
இதனை தொடர்ந்து, இரண்டு லாரி மற்றும் மண் அள்ளிய வாகனம் என, மூன்று வாகனங்களை பறிமுதல் செய்து விசாரித்தனர். தொடர்ந்து, முறைகேடாக மண் அள்ளியது தொடர்பாக தாசில்தார் புகாரின் பேரில், குண்டடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இதுதொடர்பாக, இடத்தின் உரிமையாளர் சண்முக சுந்தரம் மற்றும் தப்பிய மண் மாபியாக கும்பல் குறித்து விசாரித்து வருகின்றனர்.