/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கோவில் சொத்து கோவிலுக்கே... அதிரடி காட்டிய அதிகாரி!
/
கோவில் சொத்து கோவிலுக்கே... அதிரடி காட்டிய அதிகாரி!
கோவில் சொத்து கோவிலுக்கே... அதிரடி காட்டிய அதிகாரி!
கோவில் சொத்து கோவிலுக்கே... அதிரடி காட்டிய அதிகாரி!
ADDED : ஆக 01, 2024 01:22 AM

பல்லடம் : பல்லடம் கடைவீதியில் மாகாளியம்மன் கோவில் உள்ளது. அறநிலையத் துறை கோவிலான இதில், திருப்பணி நடந்து வருகிறது.
அதற்காக, கோவிலுக்கு சொந்தமான நிலங்களை கையகப்படுத்தும் பணியிலும் அறநிலை துறையினர் ஈடுபட்டுள்ளனர். அவ்வகையில், கோவிலுக்கு முன் உள்ள கடைகள் கையகப்படுத்தப்பட்டு வருகின்றன. கடை உரிமையாளர்கள் காலி செய்யாத நிலையில், நேற்று காலை, அறநிலையத்துறை இணை கமிஷனர் ஹர்ஷினி தலைமையிலான அதிகாரிகள் கடைகளுக்கு பூட்டு போட தயாராகினர்.
செலுத்த வேண்டிய வாடகை தொகையை குறைக்குமாறு கடை உரிமையாளர்கள் வேண்டுகோள் வைத்து தொடர்ந்து, 7 லட்சம் ரூபாய் முதல் கட்டமாக செலுத்த அனுமதிக்கப்பட்டது. அதன்பின், கடைகளை அறநிலையத்துறை வசம் ஒப்படைப்பதாக அனைவரும் எழுதி கொடுத்தனர்.
இணை கமிஷனர் ஹர்ஷினி கூறியதாவது:
இத்தனை ஆண்டுகளாக வாடகையே இல்லாமல் கோவில் நிலத்தில் கடைகளை அமைத்து அனுபவித்து வந்துள்ளீர்கள். கடந்த, 2005ல், கலெக்டர் உத்தரவிட்டும், 2023ல் கோர்ட் தீர்ப்பு வழங்கியும், ஒரு வாரத்துக்கு முன் நோட்டீஸ் வழங்கியும் கடைகளை காலி செய்யாமல் உள்ளீர்கள்.
இதனால், அரசுக்கு நிதி இழப்பீடு ஏற்பட்டுள்ளது. இதனை ஈடு செய்யும் வகையில், ஒவ்வொருவரும் தலா, 10 லட்சம் ரூபாய் கோவில் திருப்பணிக்கு வழங்க வேண்டும். கோவில் சொத்து கோவிலுக்கு தான். இனி, பொது ஏலத்தின் அடிப்படையில் தான் கடைகள் வாடகைக்கு விடப்படும். இவ்வாறு அவர் கூறினார்.