/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அரை நுாற்றாண்டுக்கு பின் தொரவலுார் குளம் நிரம்பியது
/
அரை நுாற்றாண்டுக்கு பின் தொரவலுார் குளம் நிரம்பியது
அரை நுாற்றாண்டுக்கு பின் தொரவலுார் குளம் நிரம்பியது
அரை நுாற்றாண்டுக்கு பின் தொரவலுார் குளம் நிரம்பியது
ADDED : மார் 10, 2025 12:47 AM

அனுப்பர்பாளையம்; அத்திக்கடவு -- அவிநாசி திட்டம் மூலம் திருப்பூர் ஒன்றியம், மேற்கு பதி ஊராட்சியில் நுாறு ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள தொரவலுார் குளம் நிரம்பியுள்ளது.
அரை நுாற்றாண்டு காலத்துக்கு பின், குளம் நிரம்பி உள்ளதாக அப்பகுதி பொது மக்கள் தெரிவித்துள்ளனர்.
குளம் நிரம்பியுள்ளதையொட்டி குளத்தில் மீன் பிடிக்க ஊராட்சி சார்பில், ஆண்டுக்கு ஐந்து லட்சம் வீதம் மூன்று ஆண்டுகளுக்கு 15 லட்சம் ரூபாய் குத்தகை விடப்பட்டுள்ளது.
ஒப்பந்தம் எடுத்தவர்கள் குளத்தில் கெண்டை, மிருசால் கெண்டை, கட்லா, ரோகு உள்ளிட்ட பல்வேறு வகை மீன்களை வளர்த்து வருகின்றனர். நன்கு வளர்ந்துள்ள மீன்களை தற்போது தினசரி பிடித்து விற்பனை செய்து வருகின்றனர்.