/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
நிழல் கொடுத்த மரம் 'மொட்டை' ஆனது
/
நிழல் கொடுத்த மரம் 'மொட்டை' ஆனது
ADDED : ஆக 04, 2024 11:31 PM

திருப்பூர்: திருப்பூர், ராயபுரம் ரவுண்டானா பார்க் முதல் கல்லம்பாளையம் செல்லும் ரோட்டோரம் மரங்கள் உள்ளன. அந்த வழியாகச் சென்று வருவோர்; அங்குள்ள ரேஷன் கடைக்கு வருவோர் மர நிழலில் களைப்பாறுவது வழக்கமாக உள்ளது.
நேற்று காலை இதில் ஒரு பெரிய மரத்தின் கிளைகள் முற்றிலுமாக வெட்டி எடுத்து, துண்டுகளாக்கி அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டது. இயற்கை ஆர்வலர்கள் அதிர்ச்சியடைந்தனர். வருவாய்த்துறை, மாநகராட்சி, மின்வாரியம் என எந்த துறை சார்ந்த ஊழியர்களும் இல்லாமல் மரக்கிளைகள் வெட்டி அகற்றி எடுத்துச் செல்லப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அப்பகுதியினர் கேட்ட போது, 'முன்புறம் உள்ள கட்டடத்தின் அழகு பாதிக்கிறது. தேவையற்ற ஆட்கள் மரத்தின் நிழலுக்கு ஒதுங்குகின்றனர். இதனால், மரக்கிளைகளை ெவட்டுமாறு கூறினர்' என்று அந்த ஊழியர்கள் பதில் அளித்தனர்.
இயற்கையை பாழடிக்கும் இது போன்ற சம்பவங்கள் குறித்து வருவாய் துறையினர் உரிய கண்காணிப்பு மேற்கொண்டு, மரங்களை வெட்டும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.