/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஆடுகளின் கோடைக்கால உணவு பூர்த்தி செய்யும் வெள்வேல் மரம்
/
ஆடுகளின் கோடைக்கால உணவு பூர்த்தி செய்யும் வெள்வேல் மரம்
ஆடுகளின் கோடைக்கால உணவு பூர்த்தி செய்யும் வெள்வேல் மரம்
ஆடுகளின் கோடைக்கால உணவு பூர்த்தி செய்யும் வெள்வேல் மரம்
ADDED : மார் 02, 2025 04:50 AM
பொங்கலுார்: மாசி, பங்குனி மாதங்கள் வறட்சியான காலமாகும். சித்திரை மாதத்தில் தான் கோடை மழை பெய்யும். அதுவரை கால்நடை களுக்கு கடுமையான தீவன பற்றாக்குறை ஏற்படும். கோடைக்கால உணவு தேவையை சமாளிப்பதற்காகவே வெள்வேல் மரங்கள் மேய்ச்சல் நிலங்களில் வளர்ந்து நிற்கின்றன.
இது கால்நடை விவசாயிகளுக்கு இயற்கை அளித்த கொடை என்றே கூறலாம். கடும் வறட்சி மிகுந்த பகுதிகளில் செழித்து வளரும் இயல்புடையவை. மனிதனால் வளர்க்கப்படாமல் தன்னிச்சையாக வளரும் மரங்களில் இதுவும் ஒன்று.
ஆடு, மாடுகளின் சாணம், புழுக்கை ஆகியவற்றின் மூலம் இவற்றின் விதைகள் பல இடங்களுக்கும் பரவுகிறது. பல ஆண்டுகள் வளர்ந்த மரங்களை வெட்டி விற்பனை செய்வதன் மூலம் விவசாயிகளுக்கும் கணிசமான வருமானம் கிடைக்கிறது.
நன்கு காய்ந்த வெள்வேல் மரத்தின் காய்கள் கால்நடைகளுக்கு மிகச் சிறந்த ஊட்டச்சத்து ஆகும். இவற்றை சாப்பிடும் கால்நடைகள் திடகாத்திரமாக இருக்கும். ஆனால், பச்சைக் காய் களைக் கொடுக்கக் கூடாது. அவை கால்நடைகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தும்.
சமீபகாலமாக ரியல் எஸ்டேட் தொழில் வளர்ந்து வருவதாலும், உயிர் வேலியை அழித்து கம்பிவேலி போடுவதாலும் வெள்வேல் மரங்கள் வேகமாக அழிக்கப்பட்டு வருகின்றன.