/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
நான்கு பேர் கொலை வழக்கு வரும் 15ம் தேதியில் தீர்ப்பு
/
நான்கு பேர் கொலை வழக்கு வரும் 15ம் தேதியில் தீர்ப்பு
நான்கு பேர் கொலை வழக்கு வரும் 15ம் தேதியில் தீர்ப்பு
நான்கு பேர் கொலை வழக்கு வரும் 15ம் தேதியில் தீர்ப்பு
ADDED : ஏப் 09, 2024 11:11 PM
திருப்பூர்;பல்லடத்தில், நான்கு பேர் கொலை செய்யப்பட்ட வழக்கில், திருப்பூர் மாவட்ட முதன்மை அமர்வு கோர்ட்டில் வரும், 15ம் தேதி தீர்ப்பு அளிக்கப்படுகிறது.
திருப்பூர் மாவட்டம், பல்லடம், கள்ளக்கிணறு, குரைத்தோட்டத்தை சேர்ந்தவர் மோகன்ராஜ், 45. அவரது தாய் புஷ்பவதி, 67. அவரது அத்தை ரத்தினம்மாள், 58, பெரியப்பா மகன் செந்தில்குமார், 47 ஆகியோர் கடந்த ஆண்டு வெட்டி கொலை செய்யப்பட்டனர்.
இந்த கொடூர கொலையில் தொடர்புடைய, செல்லமுத்து, 24, ஐயப்பன், 52, ராஜ்குமார், 27, சோனை முத்தையா, 30 மற்றும் வெங்கடேஷ், 29 என, ஐந்து பேரை போலீசார் கைது செய்தனர். இச்சூழலில், கொலை வழக்கில், போலீஸ் தரப்பில் புலன் விசாரணை மேற்கொண்டு, சாட்சிகள் விசாரணை முடித்து, ஐந்து பேர் மீது, 800 பக்கத்துக்கு குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
வழக்கு விசாரணை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தொடர்ச்சியாக நடந்து வந்தது. மொத்தம், 51 சாட்சிகளிடம் விசாரணை நடத்தி முடிக்கப்பட்டது. இவ்வழக்கில் வரும், 15ம் தேதி தீர்ப்பு வெளியாக உள்ளது.

