/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பாதிக்கப்பட்டவர் புகார் அளிக்க குற்றப்பிரிவு போலீசார் அழைப்பு
/
பாதிக்கப்பட்டவர் புகார் அளிக்க குற்றப்பிரிவு போலீசார் அழைப்பு
பாதிக்கப்பட்டவர் புகார் அளிக்க குற்றப்பிரிவு போலீசார் அழைப்பு
பாதிக்கப்பட்டவர் புகார் அளிக்க குற்றப்பிரிவு போலீசார் அழைப்பு
ADDED : மே 28, 2024 12:48 AM
திருப்பூர்:வெள்ளகோவில், துரைசாமி நகரை சேர்ந்தவர் ஆனந்தன், 42. இவரது தாய் சரஸ்வதி, 58. மகன் கோகுல், 28 ஆகியோர் ஸ்ரீ சிவசெல்வி ஆட்டோ பைனான்ஸ் என்ற பெயரில் நிறுவனம் நடத்தினர். இந்நிறுவனத்தில் முதலீடு செய்தால், 18 சதவீதம் வட்டி கொடுப்பதாக கூறி விளம்பரம் செய்தனர்.
இதனை நம்பிய, 39 பேரிடம் இருந்து 3 கோடியே, 56 லட்சத்து, 14 ஆயிரம் ரூபாயை ஆனந்தன் வசூல் செய்தார். ஆனால், வட்டி கொடுக்காமல் ஏமாற்றி மோசடி செய்தனர். திருப்பூர் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விசாரித்து, சரஸ்வதி, கோகுல் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்நிறுவனத்தில் முதலீடு செய்து இதுவரை புகார் கொடுக்காதவர்கள், அசல் ஆவணங்களுடன் நேரடியாக, டி.எஸ்.பி., அலுவலகம், பொருளாதார குற்றப்பிரிவு, ராணி பில்டிங்ஸ், 3 வது மாடி, திருப்பூர் ரோடு, அவிநாசி முகவரியில் வந்து புகார் அளிக்கலாம் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.