ADDED : மே 11, 2024 12:35 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்;கோவை, கவுண்டம்பாளையத்தைச் சேர்ந்தவர் நாகராஜ், 23. தனியார் நிறுவன ஊழியர். கடந்த 7ம் தேதி பைக்கில் காங்கயத்திலுள்ள உறவினர் வீட்டுக்கு வந்தார். கோவை ரோடு, காடையூர் இல்லியம்புதுார் பிரிவு அருகே, வேகமாக வந்த பைக் கட்டுப்பாட்டை இழந்த நிலையில், அவர் பைக்கிலிருந்து தடுமாறி கீழே விழுந்து காயமடைந்தார்.
கோவை அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். காங்கயம் போலீசார் விசாரிக்கின்றனர்.