/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தில் திருட்டு
/
உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தில் திருட்டு
ADDED : ஆக 09, 2024 12:46 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உடுமலை:உடுமலை அருகே, உழவர் உற்பத்தியாளர் நிறுவன அலுவலகத்தில், கதவை உடைத்து, பீரோவிலிருந்த பணத்தை திருடியவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
உடுமலை அருகேயுள்ள வாளவாடியில், திருப்பூர் மாவட்ட உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் செயல்படுகிறது. 500க்கும் மேற்பட்ட விவசாயிகள் உறுப்பினர்களாக உள்ளனர்.
இந்த நிறுவன அலுவலகத்தில், நேற்று முன்தினம் புகுந்த திருடர்கள், வெளிப்புற கதவை நெம்பி உடைத்து, உள்ளே புகுந்துள்ளனர். அங்கிருந்த பீரோவை உடைத்து, உள்ளிருந்த, 7 ஆயிரம் பணத்தை திருடி சென்றுள்ளனர். இது குறித்து தளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.