/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மரங்கள் வெட்டிச் சாய்ப்பு: மக்கள் திரண்டதால் பரபரப்பு
/
மரங்கள் வெட்டிச் சாய்ப்பு: மக்கள் திரண்டதால் பரபரப்பு
மரங்கள் வெட்டிச் சாய்ப்பு: மக்கள் திரண்டதால் பரபரப்பு
மரங்கள் வெட்டிச் சாய்ப்பு: மக்கள் திரண்டதால் பரபரப்பு
ADDED : மே 28, 2024 12:44 AM

அவிநாசி;அவிநாசி ஒன்றியம், கருவலுார் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் உப்பிலிபாளையம் செல்லும் வழியில், ஐந்து ஏக்கர் பரப்பளவில் குட்டை உள்ளது. குட்டையில் பல வகை மரங்கள் வளர்ந்துள்ளது.
மரங்களை, பொக்லைன் இயந்திரம் வைத்து, ஒரு சிலர் தோண்டிக் கொண்டிருந்தனர். இதனை பார்த்த அப்பகுதியினர், உடனடியாக அவிநாசி தாசில்தார், கருவலுார் வி.ஏ.ஓ., துரைசாமி, ஊராட்சி தலைவர் முருகன், தகவல் அளித்தனர்.
மரங்களை தோண்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மரத்தை வெட்டிக்கொண்டு இருந்த ஆட்களையும் குட்டையில் இருந்து வெளியேற்றினர். பொதுமக்கள் அதிக அளவில் திரண்டதால், மரத்தை வெட்டிய நபர்கள் அங்கிருந்து தப்பினர்.
இது குறித்து, வி.ஏ.ஓ., துரைசாமி கூறியதாவது:
வருவாய்த் துறையில் உள்ள ஆவணங்களின்படி குட்டை இல்லை. இது சம்பந்தமாக உப்பிலிபாளையம் பகுதியைச் சேர்ந்த, 4 நபர்கள் அவர்களது சொந்த பட்டா நிலம் என அதற்கான ஆவணங்களை கொடுத்து சென்றுள்ளனர். 1987 முதல் உள்ள வருவாய்த்துறை ஆவணங்களில் குட்டை இல்லை என உள்ளது. ஆனால் பொதுப்பணித்துறையினர் அந்த இடத்தில் குட்டை உள்ளது என தெரிவிக்கின்றனர்.
இது சம்பந்தமாக தாசில்தார் மோகனிடம் உரிய ஆவணங்களை சமர்ப்பித்து பொதுப்பணி துறையினரிடமும் உள்ள ஆவணங்களின்படி நில அளவை செய்து முடிவு செய்யப்படும். அதுவரை அந்தப் பகுதியில் உள்ள மரங்களை வெட்டக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.