/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஆற்றுப்பாலத்தில் மின்விளக்கு வசதி தேவை
/
ஆற்றுப்பாலத்தில் மின்விளக்கு வசதி தேவை
ADDED : ஏப் 04, 2024 10:46 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உடுமலை:அமராவதி ஆற்றுப்பாலத்தில் மின்விளக்கு வசதி செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டுநர்கள் எதிர்பார்க்கின்றனர்.
திருப்பூர் - திண்டுக்கல் மாவட்டங்களின் எல்லையில், அமராவதி ஆற்றுப்பாலம் உள்ளது. இப்பாலத்தில் மின்விளக்குகள், ஒளிரும் பிரதிபலிப்பான்கள் அமைக்கப்படவில்லை. இதனால், தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் வாகன ஓட்டுநர்கள், பாதசாரிகள் கடும் பாதிப்புக்குள்ளாகின்றனர். சில சமயங்களில் சிறுசிறு விபத்துகளும் ஏற்பட வாய்ப்பள்ளது. எனவே, அங்கு அவற்றை அமைக்க பேரூராட்சி, பொதுப்பணித்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

