/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
நத்தம் நில வகைப்பாடு மாற்றத்தில் மக்களிடம் விழிப்புணர்வு இல்லை
/
நத்தம் நில வகைப்பாடு மாற்றத்தில் மக்களிடம் விழிப்புணர்வு இல்லை
நத்தம் நில வகைப்பாடு மாற்றத்தில் மக்களிடம் விழிப்புணர்வு இல்லை
நத்தம் நில வகைப்பாடு மாற்றத்தில் மக்களிடம் விழிப்புணர்வு இல்லை
ADDED : மே 14, 2024 03:48 AM

சென்னை: தமிழகத்தில் ஒவ்வொரு கிராமத்திலும் குறிப்பிட்ட அளவு நிலங்கள் நத்தம் என, வகைப்படுத்தப்பட்டு உள்ளன. இந்த நிலங்கள் ஏழை மக்கள் குடியிருக்கவும், விவசாயம் செய்யவும் ஒதுக்கப்பட்டு வந்தன.
பொருளாதார ரீதியில் பின்தங்கிய மக்கள் மட்டும், இதை அனுபவிக்க வேண்டும் என்பதற்காக, இந்நிலங்களை விற்க முடியாத அளவுக்கு கட்டுப்பாடுகள் இருந்தன.அதனால், கட்டட அனுமதி உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்படுவதாக புகார்கள் எழுந்தன.
இதையடுத்து, நத்தம் நிலங்களுக்கு பட்டா வழங்கும் திட்டத்தை, அரசு செயல்படுத்தி வருகிறது. ஆனால், நத்தம் நிலங்களின் சர்வே எண், பட்டா எண் உள்ளிட்ட விபரங்கள், வழக்கமான நில விபரத் தொகுப்பில் சேர்க்கப்படாமல் இருந்தன.
அதனால், வழக்கமான நிலங்களின் பட்டா உள்ளிட்ட விபரங்களை பெறுவது போன்று, நத்தம் நில விபரங்களை, 'ஆன்லைன்' முறையில் பார்க்கும் வசதியை அரசு அறிவித்தது. இதற்கு மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
இது குறித்து, வருவாய் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
தனியார் கட்டுப்பாட்டில் உள்ள நத்தம் நிலங்களை, 'ரயத்துவாரி' என்றும், அரசின் கட்டுப்பாட்டில் உள்ள நத்தம் நிலங்களை, 'சர்கார்' என்றும் பொதுவான பெயரில் குறிப்பிட அறிவுறுத்தப்பட்டது.
இதற்கான அரசாணை, கடந்த ஆண்டு மே மாதம் பிறப்பிக்கப்பட்டது. அரசாணை வந்து ஓராண்டாகியும், பொதுமக்கள் மத்தியில் போதிய விழிப்புணர்வு ஏற்படவில்லை. இந்த வகைப்பாடு மாற்றத்தை பிரதிபலிக்கும் வகையில், சொத்து பரிமாற்ற பத்திரங்களை எழுத வேண்டும். அப்போது தான் இதன் அடிப்படையில் புதிய பட்டா, அடங்கல் ஆவணங்களில் தெளிவாக குறிப்பிட வாய்ப்பு ஏற்படும்.
இந்த விஷயத்தில், வருவாய் துறையினர் பொது மக்களுக்கு உரிய விளக்கங்களை அளிக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

