/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அம்மா உணவகத்தில் குடிநீர் வசதி இல்லை: மக்கள் விலைக்கு வாங்கும் அவலம்
/
அம்மா உணவகத்தில் குடிநீர் வசதி இல்லை: மக்கள் விலைக்கு வாங்கும் அவலம்
அம்மா உணவகத்தில் குடிநீர் வசதி இல்லை: மக்கள் விலைக்கு வாங்கும் அவலம்
அம்மா உணவகத்தில் குடிநீர் வசதி இல்லை: மக்கள் விலைக்கு வாங்கும் அவலம்
ADDED : மார் 07, 2025 08:21 PM
உடுமலை:
உடுமலை அம்மா உணவகத்தில், அடிப்படையான குடிநீர் வசதி இல்லாததால், மக்கள் குடிநீர் விலைக்கு வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
உடுமலையில், அம்மா உணவகம் கல்பனா ரோட்டில் அமைந்துள்ளது. இங்கு நாள்தோறும் காலையிலும், மதியமும் நுாற்றுக்கும் மேற்பட்டோர் உணவு சாப்பிடுகின்றனர். காலையில் டிபன், மதியம் கலவை சாதங்கள் என வழங்கப்படுகிறது.
உடுமலை சுற்றுப்பகுதியில் வயது முதிர்ந்தவர்கள், ஆதரவற்றவர்கள், அருகில் உள்ள கடைகளில் பணிசெய்யும் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கியுள்ள பலரும், இந்த உணவகத்தை பயன்படுத்துகின்றனர்.
இவ்வாறு பலரும் உணவு அருந்த செல்லும் இடத்தில், முறையான குடிநீர் வசதி இல்லாததால் அவர்கள் பெரிதும் அவதிக்குள்ளாகின்றனர். குறிப்பாக முதியோர், உடல்நலம் பாதிக்கப்பட்டவர்கள் குடிநீர் இல்லாமல் தவிக்கின்றனர்.
இங்குள்ள குடிநீர் சுத்திகரிப்பு கருவி, பல மாதங்களுக்கு முன்பு பழுதடைந்ததால், சரிசெய்வதற்கு நகராட்சி நிர்வாகம் எடுத்துச்சென்றது. இதுவரை அந்த கருவி பொருத்தப்படவில்லை.
இதற்கு மாற்றாக, பெயரளவில் உணவகத்துக்கு வெளியில் சுகாதாரமற்ற நிலையில் குடத்தில் தண்ணீர் வைக்கப்பட்டுள்ளது. அந்த தண்ணீரும் துாய்மை இல்லாமல் இருப்பதால், மக்கள் அதை பயன்படுத்துவதில்லை.
உணவகத்துக்கு வரும் மக்கள் கூறியதாவது:
உணவகத்தில் குடிநீர் வசதி இல்லாததால், நாங்கள் வெளியில்தான் குடிநீர் வாங்க வேண்டியுள்ளது. பொருளாதார நிலையால் பசியோடு இருக்கக் கூடாதென துவக்கப்பட்டதுதான் இத்திட்டம்.
ஆனால் அதிலும் அடிப்படை வசதிகளை கண்டுகொள்ளாமல் இருப்பதால் எங்களுக்கு மிகவும் சிரமமாக உள்ளது. நகராட்சி நிர்வாகம் இந்த கருவியை மீண்டும் பொருத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, தெரிவித்தனர்.