/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
15 நாளாக குடிநீர் இல்லை மக்கள் சாலைமறியல்
/
15 நாளாக குடிநீர் இல்லை மக்கள் சாலைமறியல்
ADDED : ஆக 11, 2024 11:14 PM

அனுப்பர்பாளையம்:திருப்பூர், நான்காவது வார்டு, தோட்டத்துப்பாளையம் பகுதியில் குடிநீர் வினியோகித்து 15 நாட்கள் ஆகின்றன. மாநகராட்சி இரண்டாவது மண்டல அலுவலகத்தில் முறையிட்டும் நடவடிக்கை இல்லை. ஆத்திரமடைந்த பொதுமக்கள், நேற்று காலை காலி குடத்துடன் தோட்டத்துப் பாளையம் பஸ் ஸ்டாப் அருகில் ரிங் ரோட்டில் சாலை மறியலில் ஈடுபட்டனர். போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
அங்கு வந்த மாநகராட்சி உதவி பொறியாளர் சுரேஷ், ''குடிநீர் சீராக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நாளை முதல் குடிநீர் சீராக வழங்கப்படும்'' என்றார். இதையேற்று பொதுமக்கள் மறியலை கைவிட்டனர்.
.......
தோட்டத்துப்பாளையம் பஸ் ஸ்டாப் அருகில் ரிங் ரோட்டில் மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்.