நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆடி மாத பிறப்பு முதல் தொடர் விசேஷங்களால் மீன் விற்பனை குறைந்து கொண்டே வருகிறது.
நேற்று, தென்னம்பாளையம் மீன் மார்க்கெட்டுக்கு, 50 டன் கடல், 15 டன் அணை மீன்கள் விற்பனைக்கு வந்தது. ஆடி அமாவாசை என்பதால், அதிகாலை மீன் விற்பனை சுறுசுறுப்பாக இல்லை. மொத்த வியாபாரிகளும் குறைந்தளவு மீன்களையே வாங்கிச் சென்றனர். மதியத்துக்கு மேலும் மீன் விற்பனையாகவில்லை. இதனால் மத்தி கிலோ 110 ரூபாய், பாறை, 130, வஞ்சிரம், 350, படையப்பா, 300, நண்டு, 320, வாவல், 300 ரூபாய்க்கு விற்றது. விலை குறைந்த போதும், வாங்கிச் செல்ல ஆளில்லை என வியாபாரிகள் தெரிவித்தனர்.