ADDED : ஏப் 07, 2024 12:39 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்:திருப்பூர், காங்கயம் ரோடு, முதலிபாளையத்தில் இருந்து பெருந்தொழுவு வழியாக அவிநாசிபாளையம் வரை செல்லும் ரோட்டின் குறுக்கே சமீபத்தில் வேகத்தடைகள் அமைக்கப்பட்டன. ஆனால், வேகத்தடைக்கு வெள்ளை வர்ணம் பூசப்படவில்லை.
வாகன ஓட்டிகளுக்கு வேகத்தடை இருப்பதே தெரிவதில்லை. வேகத்தடையால் விபத்துகள் அதிகரித்துள்ளது. எனவே, உடனடியாக வேகத்தடைக்கு வெள்ளை வர்ணம் பூச வேண்டும்.

