/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
' மாற்றுத்திறன் ' கொண்டு சாதித்தனர்!
/
' மாற்றுத்திறன் ' கொண்டு சாதித்தனர்!
ADDED : செப் 13, 2024 11:57 PM

திருப்பூர் : திருப்பூர், காலேஜ் ரோடு, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மைதானத்தில், முதல்வர் கோப்பை மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டி நேற்று நடந்தது.
போட்டிகளை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ராம்வசந்தகுமார் துவக்கி வைத்தார். தடகள பயிற்சியாளர் திலகவதி, உடற்கல்வி ஆசிரியர் ராஜன் போட்டிகளை ஒருங்கிணைத்தார்.
மாற்றுத்திறனாளிகள் பிரிவில், ஆண்கள், பெண்கள் என மொத்தம், 113 பேர் ஆர்வமுடன் பங்கேற்றனர்.
காதுகேளாதோர், பார்வை குறைபாடு உடையவர், உடல் ஊனமுற்றோர் உள்ளிட்ட நான்கு பிரிவுகளாக போட்டிகள் நடத்தப்பட்டது. தங்கள் உடல், மனக்குறைகளை மறந்து, ஆர்வமுடன் மாற்றுத்திறனாளிகள் போட்டிகளில் திறமை காட்டினார், பார்வையாளர்களின் கை தட்டல்களை பெற்றனர்.
போட்டி முடிவுகள்
ஆண்கள் பிரிவில் முதலிடம் சாய்கிருபா பள்ளி, இரண்டாமிடம் மாதர் தெரசா சிறப்பு பள்ளி, மூன்றாமிடம் பாரதி வித்யாஸ்ரம்பம் பள்ளி.
பெண்கள் பிரிவில் முதலிடம் அண்ணாள் சிறப்பு பள்ளி அணி, பாரதி பள்ளி அணி இரண்டாமிடம், சாய்கிருபா பள்ளி அணி மூன்றாமிடம். ஒவ்வொரு அணியிலும் ஏழு பேர் இடம் பெற்றிருந்தனர்.
மொத்தம், 42 பேருக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.