/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'தினமலர்' இன்ஜினியரிங் கவுன்சிலிங் வழிகாட்டி பெற்றோர், மாணவர் ஆர்வம்பொங்க பங்கேற்பு
/
'தினமலர்' இன்ஜினியரிங் கவுன்சிலிங் வழிகாட்டி பெற்றோர், மாணவர் ஆர்வம்பொங்க பங்கேற்பு
'தினமலர்' இன்ஜினியரிங் கவுன்சிலிங் வழிகாட்டி பெற்றோர், மாணவர் ஆர்வம்பொங்க பங்கேற்பு
'தினமலர்' இன்ஜினியரிங் கவுன்சிலிங் வழிகாட்டி பெற்றோர், மாணவர் ஆர்வம்பொங்க பங்கேற்பு
ADDED : ஜூலை 07, 2024 11:51 PM

திருப்பூர்;திருப்பூரில் நேற்று 'தினமலர்' நாளிதழ், சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி சார்பில் நடந்த இன்ஜினியரிங் கவுன்சிலிங் வழிகாட்டி நிகழ்ச்சியில், மாணவ - மாணவியர், பெற்றோர் ஆர்வம் பொங்க பங்கேற்று, சந்தேகங்களுக்குத் தெளிவு பெற்றனர்.
அண்ணா பல்கலைக்கழக இணைப்பில் உள்ள இன்ஜினியரிங் கல்லுாரிகளில், பி.இ., பி.டெக்., முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கு, தமிழக அரசு சார்பில், ஆன்லைனில் கவுன்சிலிங் நடத்தப்படுகிறது. இதில் பங்கேற்கும் மாணவர்கள், தங்களுக்கு விருப்பமான கல்லுாரி மற்றும் விரும்பிய பாடப்பிரிவை தேர்வு செய்வதற்கான வழிமுறை குறித்து, 'தினமலர்' நாளிதழ், சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி ஆகியன சார்பில், இன்ஜினியரிங் வழிகாட்டி கவுன்சிலிங் நிகழ்ச்சி, திருப்பூர், தாராபுரம் ரோடு, வித்யா கார்த்திக் திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது.
அண்ணா பல்கலைக்கழக மாணவர் சேர்க்கை முன்னாள் இயக்குனர் டாக்டர் நாகராஜன், சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி முதல்வர் ரமேஷ், கற்பகம் குழுமங்களின் பிராண்டிங் மற்றும் மாணவர் சேர்க்கை பிரிவு தலைவர் சுப்புராஜ், மாணவியர் சுவாதி, பூஜா உள்ளிட்டோர் குத்துவிளக்கேற்றி, நிகழ்ச்சியை துவக்கி வைத்தனர்.
இதில் பங்கேற்க மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மாணவர்கள், பெற்றோர்கள் ஆர்வத்துடன் குவிந்தனர். கல்வியாளர்கள் தெரிவித்த கருத்துகள் மூலம், இன்ஜினியரிங் கவுன்சிலிங் குறித்த சந்தேகங்களில் இருந்து முழுமையாகத் தெளிவு பெற்றனர். இன்ஜி., கவுன்சிலிங்குக்கு விண்ணப்பித்த மாணவ, மாணவியர் மட்டுமின்றி, தற்போது, பிளஸ் 1, பிளஸ் 2 படித்து வருவோரும் அதிகளவில் பங்கேற்றனர்.
இந்நிகழ்ச்சியை 'தினமலர்' நாளிதழுடன், கோவை ஸ்ரீஈஸ்வர் பொறியியல் கல்லுாரி மற்றும் கற்பகம் கல்வி நிறுவனங்கள் இணைந்து வழங்கின.