/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'தினமலர்' இன்ஜினியரிங் கவுன்சிலிங் வழிகாட்டி திருப்பூரில் வரும் 7ம் தேதி நடக்கிறது
/
'தினமலர்' இன்ஜினியரிங் கவுன்சிலிங் வழிகாட்டி திருப்பூரில் வரும் 7ம் தேதி நடக்கிறது
'தினமலர்' இன்ஜினியரிங் கவுன்சிலிங் வழிகாட்டி திருப்பூரில் வரும் 7ம் தேதி நடக்கிறது
'தினமலர்' இன்ஜினியரிங் கவுன்சிலிங் வழிகாட்டி திருப்பூரில் வரும் 7ம் தேதி நடக்கிறது
ADDED : ஜூலை 02, 2024 01:32 AM
திருப்பூர்:இன்ஜினியரிங் கவுன்சிலிங்கில் பங்கேற்கும் மாணவர்களுக்கு ஆலோசனை வழங்கும் நிகழ்ச்சி, 'தினமலர்' நாளிதழ் சார்பில், வித்யா கார்த்திக் திருமண மண்டபத்தில் வரும், 7ம் தேதி நடக்கிறது.
அண்ணா பல்கலைக் கழக இணைப்பில் உள்ள இன்ஜினியரிங் கல்லுாரிகளில் பி.இ., பி.டெக்., முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கு, ஆன்லைனில் கவுன்சிலிங் தமிழக அரசு சார்பில் நடத்தப்படுகிறது. இதில் பங்குபெறும் மாணவர், தங்களுக்கு விருப்பமான கல்லுாரி பாடப்பிரிவை தேர்வு செய்வதற்கான வழிமுறை குறித்து 'தினமலர்' நாளிதழ் வழிகாட்ட உள்ளது.
இதற்காக சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி கல்லுாரியுடன் இணைந்து, 'தினமலர்' நாளிதழ் 'டி.என்.இ.ஏ., இன்ஜினியரிங் கவுன்சிலிங் வழிகாட்டி - 2024' என்ற நிகழ்ச்சியை மாநிலம் முழுதும் நடத்தி வருகிறது.
இந்நிகழ்ச்சியில், ஆன்லைன் கவுன்சிலிங் விதிமுறை, சிறந்த கல்லுாரி மற்றும் பாடப்பிரிவை தேர்வு செய்தல், 'கட் ஆப்' மதிப்பெண்ணின் முக்கியத்துவம், தரவரிசை, விருப்ப பாடப்பிரிவை தேர்வு செய்யும் முறை, வேலைவாய்ப்பு மிகுந்த இன்ஜினியரிங் பாடப்பிரிவு குறித்த சந்தேகங்களுக்கு கல்வியாளர்கள், நிபுணர்கள் விளக்கம் தருகின்றனர்.
இந்தாண்டு எந்த படிப்புக்கு மவுசு அதிகம், என்ன பாடப்பிரிவுக்கு என்ன எதிர்காலம், கோர் இன்ஜினியரிங் படிப்புகளுக்கான வாய்ப்பு எப்படி, சிறந்த கல்லுாரியை தேர்வு செய்வதற்கான வழிகள் குறித்தும் விளக்கப்படுகிறது.
திருப்பூர், தாராபுரம் ரோடு, வித்யாகார்த்திக் திருமண மண்டபத்தில் வரும், 7ம் தேதி, காலை, 10:00 மணி முதல் மதியம், 1:00 மணி வரை நடக்கவுள்ள இந்நிகழ்ச்சியில், தமிழக இன்ஜினியரிங் கவுன்சிலிங் கமிட்டி செயலர் புருேஷாத்தமன், கல்வி ஆலோசகர் அஸ்வின் ஆகியோர், மாணவ, மாணவியருக்கு தேவையான தகவல்களை வழங்குகின்றனர். இந்த நிகழ்ச்சியை கோவை ஸ்ரீ ஈஸ்வர் பொறியியல் கல்லுாரி, கற்பகம் கல்வி நிறுவனங்கள் இணைந்து வழங்குகின்றன.