/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தாகம் தணிக்க தர்பூசணி ஜூஸ் இந்திரா சுந்தரம் தொண்டு நிறுவனம் அசத்தல்
/
தாகம் தணிக்க தர்பூசணி ஜூஸ் இந்திரா சுந்தரம் தொண்டு நிறுவனம் அசத்தல்
தாகம் தணிக்க தர்பூசணி ஜூஸ் இந்திரா சுந்தரம் தொண்டு நிறுவனம் அசத்தல்
தாகம் தணிக்க தர்பூசணி ஜூஸ் இந்திரா சுந்தரம் தொண்டு நிறுவனம் அசத்தல்
ADDED : மே 03, 2024 12:56 AM

திருப்பூர்:கோடை வெயிலின் தாகம் தணிக்க, இந்திரா சுந்தரம் தொண்டு நிறுவனத்தினர் தர்பூசணி ஜூஸ் பந்தல் அமைத்து, இலவசமாக வழங்க துவங்கியுள்ளனர்.
தினமும் 'தகிக்கும்' கோடை வெயிலின் தாக்கத்தில் இருந்து மக்களின் தாகம் தணிக்க, பல்வேறு அமைப்பின், அரசியல் கட்சியினர் சார்பில் ஆங்காங்கே நீர் மோர் பந்தல் திறக்கப்பட்டுள்ளன. இந்திரா சுந்தரம் தொண்டு நிறுவனம் சார்பில், காங்கயம் ரோடு, ராக்கியாபாளையம் பிரிவு அருகில் உள்ள ஏ.பி.எம்., காம்ப்ளக்ஸ் முன், தர்பூசணி பழம், ஜூஸ் மற்றும் குடிநீர் ஆகியவற்றை இலவசமாக வழங்க முடிவெடுத்து, நேற்று துவக்கி வைக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், தொண்டு நிறுவன தலைவர் இந்திரா சுந்தரம் முன்னிலையில், நல்லுார் இன்ஸ்பெக்டர் பாலமுருகன், துவக்கி வைத்தார். இந்திரா சுந்தரம் தொண்டு நிறுவன செயலாளர் ராஜா முஹம்மது உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
''தினமும், 150 கிலோ பழ வகைகள், 750 லி., ஜூஸ், மக்களுக்கு இலவசமாக வழங்கப்பட உள்ளது; 60 நாட்களுக்கு இந்த சேவை வழங்கப்படும். ஆண்டு முழுக்க, இலவச குடிநீர் வழங்கும் திட்டம் செயல்பாட்டில் இருக்கும்; வெயிலில் சிரமப்படும் மக்களுக்கு இந்த சேவை பயனளிப்பதாக இருக்கும்'' என, தொண்டு நிறுவன தலைவர் இந்திரா சுந்தரம் தெரிவித்தார்.