/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஸ்ரீசுக்ரீஸ்வரர் கோவிலில் திருவாசக முற்றோதல்
/
ஸ்ரீசுக்ரீஸ்வரர் கோவிலில் திருவாசக முற்றோதல்
ADDED : மார் 11, 2025 05:27 AM

திருப்பூர் : மாணிக்கவாசகர் திருக்கூட்டம் சார்பில், ஸ்ரீசுக்ரீஸ்வரர் கோவிலில் நேற்று திருவாசகம் முற்றோதல் நடந்தது.
திருப்பூரில் உள்ள மாணிக்கவாசகர் திருக்கூட்டம் சார்பில், பிரதி திங்கட்கிழமை தோறும் சிவாலயங்களில், திருவாசகம் முற்றோதல் நடந்து வருகிறது. இம்மாத 2வது திங்கட்கிழமையான நேற்று, எஸ்.பெரியபாளையம் ஸ்ரீசுக்ரீஸ்வரர் கோவிலில் முற்றோதல் நடந்தது.
காலை, 7:45 மணிக்கு, சிறப்பு வழிபாட்டுடன் துவங்கிய முற்றோதல், மதியம் நிறைவு பெற்றது. சிவனாடியார்களும், பக்தர்களும் பங்கேற்று, பதிகங்களை பாடினர். சிவபுராணம், கீர்த்தி திருஅகவல், திருவண்டப்பகுதி என துவங்கி, 51 பதிகங்களையும் பன்னிசையுடன் பாடினர். நிறைவாக, அச்சோப்பதிக பாடல்களை பாடி, கூட்டு வழிபாட்டுடன் முற்றோதலை நிறைவு செய்தனர்.