ADDED : ஜூன் 26, 2024 10:39 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பிளஸ் 1, பிளஸ் 2 செல்லும் அரசு பள்ளி மாணவ, மாணவியரின் திறனை கண்டறிந்து, ஊக்குவிக்கும் வகையில், முதல்வர் திறனாய்வுத்தேர்வு, ஜூலை, 21ம் தேதி நடத்தப்படுகிறது.
இத்தேர்வுக்கு, மாநில பாடத்திட்டத்தின் கீழ், அரசு பள்ளிகளில் பத்தாம் வகுப்பு பயின்று, தற்போது, 2024 - 2025ம் கல்வியாண்டில், பிளஸ் 1 அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டது. இந்நிலையில், நேற்றுடன் தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம் முடிவடைய இருந்த நிலையில், ஜூலை, 7 வரை அவகாசத்தை நீட்டித்து தேர்வுகள் துறை இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.