/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
உயர்த்திய சொத்து வரியை குறைக்க அரசுக்கு திருப்பூர் மாநகராட்சி கடிதம்
/
உயர்த்திய சொத்து வரியை குறைக்க அரசுக்கு திருப்பூர் மாநகராட்சி கடிதம்
உயர்த்திய சொத்து வரியை குறைக்க அரசுக்கு திருப்பூர் மாநகராட்சி கடிதம்
உயர்த்திய சொத்து வரியை குறைக்க அரசுக்கு திருப்பூர் மாநகராட்சி கடிதம்
ADDED : மார் 04, 2025 11:59 PM

திருப்பூர்; திருப்பூர் மாநகராட்சியில் உயர்த்தப்பட்ட சொத்து வரியை குறைக்க வேண்டும் என்ற மாநகராட்சியின் தீர்மானமும், அது குறித்த கடிதமும் துறை இயக்குநருக்கு அனுப்பப்பட்டது.
திருப்பூர் மாநகராட்சியில் சொத்து வரி உயர்வு பெரும் பிரச்னையாக வெடித்தது. மாநகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். சொத்து வரி உயர்வை ரத்து செய்ய வலியுறுத்தி, கடையடைப்பு உட்பட பல்வேறு போராட்டங்கள் நடந்தன.
இதனால், சொத்து வரியை குறைக்க தீர்மானம் நிறைவேற்ற, அ.தி.மு.க., - பா.ஜ., - கம்யூ., கட்சிகள் சார்பில், மாநகராட்சி நிர்வாகத்துக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டது.
நேற்று முன்தினம் இது குறித்து அவசர கூட்டம் நடந்தது. அதில், பேசிய மேயர் தினேஷ்குமார், ''பல்வேறு தரப்பினரின் கோரிக்கையை ஏற்று, சொத்து வரியை குறைக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அது, தமிழக அரசுக்கு அனுப்பி, பரிந்துரைக்கப்படும்,'' என்றார்.
தொடர்ந்து, சொத்து வரி குறைப்பு தீர்மானம் மற்றும் விளக்க கடிதம், நகராட்சி நிர்வாக இயக்குநருக்கு மாநகராட்சி சார்பில் அனுப்பப்பட்டது.
அதன்பின், இயக்குநர் வாயிலாக இக்கடிதம் துறை செயலருக்கும், அரசின் தலைமை செயலருக்கும் பரிந்துரை செய்யப்பட்டு, அனுமதி பெறப்படும்.
அந்த கடிதத்தில், மாநகராட்சி மன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம், வரி விதிப்பு தொடர்பான தகவல்கள், நான்கு மண்டலங்களில் உயர்த்தப்பட்ட சொத்து வரி விலை பட்டியல் இடம் பெற்றுள்ளன.
சொத்து வரி அதிகம் என்பதால், பல தரப்பினரும் குறைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். இதற்கான அனுமதியை அரசு வழங்க வேண்டும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.