/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மாநில சதுரங்க போட்டியில் திருப்பூர் மாணவர்கள் அசத்தல்
/
மாநில சதுரங்க போட்டியில் திருப்பூர் மாணவர்கள் அசத்தல்
மாநில சதுரங்க போட்டியில் திருப்பூர் மாணவர்கள் அசத்தல்
மாநில சதுரங்க போட்டியில் திருப்பூர் மாணவர்கள் அசத்தல்
ADDED : மார் 04, 2025 06:45 AM

திருப்பூர்; திருப்பூரில் நடந்த மாநில சதுரங்க போட்டியில், மாணவ, மாணவியர் பங்கேற்று, திறமை காட்டி அசத்தினர்.
திருப்பூர், முத்தணம்பாளையம், ஆக்ஸ்போர்டு மாடர்ன் மெட்ரிக் பள்ளியில், கிங்ஸ் செஸ் அகாடமி, தாராபுரம் செஸ் அகாடமி, திருப்பூர் மாவட்ட சதுரங்கக் கழகம் சார்பில், மாநில சதுரங்க போட்டி நடத்தப்பட்டது. இதில், மாநிலம் முழுவதுமிருந்து, 350 பேர் பங்கேற்றனர்.
ஒன்பது வயது மாணவர் பிரிவு தன்வந்த் முதலிடம், விவேகா இரண்டாமிடம், கிஷோர்நரேன் மூன்றாமிடம். மாணவியர் பிரிவில், நந்தனா, சிரோஸ்ரி நந்தன், இளமதி முறையே முதல் மூன்று இடம். 12 வயது மாணவர் பிரிவில், மாதேஷ்பாலாஜி முதலிடம், அதிலேஷ் இரண்டாமிடம், சுதர்ஷனா மூன்றாமிடம். மாணவியர் பிரிவில் பூவிதா, ஸ்ரீயக்ஸா, ஹரிஜனனி முதல் மூன்று இடங்களை பெற்றனர்.
பதினைந்து வயது மாணவர் பிரிவில் அபினேஷ் முதலிடம், கிரிநாத் இரண்டாமிடம், லோகித் அபினவ் மூன்றாமிடம். மாணவியர் பிரிவில், உதயஷாஸினி முதலிடம், பவிஷ்னா இரண்டாமிடம், அமினயா மூன்றாமிடம் பெற்றனர். பொதுப்பிரிவில் பாலமுருகன் முதலிடம், விக்னேஸ்வரன் - 2வது இடம், ராமன் - 3வது இடம். பொதுப்பிரிவில் சிறந்த வீராங்கனையாக சவுமியாதேவி, மூத்தோர் பிரிவு சிறந்த வீரராக இஸ்மாயில் தேர்வு செய்யப்பட்டார்.
திருப்பூர் மாவட்ட வீராங்கனையாக ஹாசினி, தேர்வு செய்யப்பட்டு, 800 ரூபாய். சிறந்த மாற்றுத்திறனாளி வீரராக மீனாட்சிசுந்தரம் தேர்வு செய்யப்பட்டு, 700 ரூபாய். 65 வயது பிரிவில், மூத்த வீராங்கனையாக ராணி தேர்வு செய்யப்பட்டு, 500 ரூபாய் ஊக்கத்தொகைகள் வழங்கப்பட்டது. வெற்றி பெற்ற அனைவருக்கும் பரிசு வழங்கப்பட்டது.