/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
திருப்பூர் பின்னலாடை நிறுவனங்கள் தொழிலாளரை பணிக்கு சேர்ப்பதில் 'அலர்ட்'
/
திருப்பூர் பின்னலாடை நிறுவனங்கள் தொழிலாளரை பணிக்கு சேர்ப்பதில் 'அலர்ட்'
திருப்பூர் பின்னலாடை நிறுவனங்கள் தொழிலாளரை பணிக்கு சேர்ப்பதில் 'அலர்ட்'
திருப்பூர் பின்னலாடை நிறுவனங்கள் தொழிலாளரை பணிக்கு சேர்ப்பதில் 'அலர்ட்'
ADDED : செப் 01, 2024 02:03 AM

திருப்பூர்:வடமாநில தொழிலாளர் என்ற போர்வையில், தடை செய்யப்பட்ட அமைப்பினர் ஊடுருவ வாய்ப்புள்ளதால் திருப்பூர் பின்னலாடை நிறுவனங்கள், எச்சரிக்கையாகச் செயல்படத் துவங்கியுள்ளன.
வங்கசேத்தில் இருந்து வெளியேறிய தடை செய்யப்பட்ட அமைப்பினர், தமிழகம் வந்து, திருப்பூரில் தலைமறைவாக வாழ திட்டமிட்டுள்ளதாக, தகவல் வெளியாகியுள்ளது. இதனால், வடமாநில தொழிலாளர் பணி நியமனத்தில் பின்னலாடை நிறுவனங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.
திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் சுப்பிரமணியன் கூறியதாவது:
'வந்தாரை வாழ வைக்கும் நகரமாக' திருப்பூர' உள்ளதால், தடை செய்யப்பட்ட அமைப்பினரும், எளிதாக வந்து அடைக்கலம் புகுந்துவிடுகின்றனர்.வங்கதேசத்தில், பின்னலாடை தொழில் பிரதானமாக இருக்கிறது. அந்த தொழிலில் இருந்தவர்கள், தடையின்றி வேலைக்கு சென்று, தலைமறைவாக வாழலாம் என்று முடிவு செய்து,திருப்பூர் வந்துவிட வாய்ப்புள்ளது.
திருப்பூரில், ஆட்கள் பற்றாக்குறை இருப்பதால், அதைப் பயன்படுத்தி கொள்கின்றனர். அனைத்து நிறுவனங்களும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். ஆதார் அட்டை, அடையாள அட்டைகளை கவனமாக சரிபார்த்த பிறகே, ஆட்களை பணியில் நியமிக்க வேண்டுமென, அனைத்து உறுப்பினர்களுக்கும் எச்சரிக்கை செய்துள்ளோம்.
இவ்வாறு, அவர் கூறினார்.
தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர் சங்க (சைமா) தலைவர் ஈஸ்வரன் கூறியதாவது:
திருப்பூர் வந்தால் சவுகரியமாக இருக்கலாம் என, வடமாநில தொழிலாளர் வருகின்றனர்; சுதந்திரமாக வாழ்கின்றனர். அவர்களுடன் சேர்ந்து, தடை செய்யப்பட்ட அமைப்பினரும் வந்துவிட வாய்ப்புள்ளது. வடமாநில தொழிலாளரை பணியில் சேர்க்க, முறையாக விசாரிக்க வேண்டும்.
கோவை - திருப்பூர் மாவட்டங்களில் வந்து தலைமறைவாக வாழ அதிக வாய்ப்புள்ளது. தீவிரமாக விசாரித்த பின்னரே பணியில் சேர்க்க வேண்டும். அனைத்து தொழில் அமைப்புகளும், அரசு வழிகாட்டுதலை கடைபிடிக்க வேண்டும். வாடகையால் வருவாய் கிடைக்குமென ஆசைப்பட்டு, வீடுகளை வாடகைக்கு வழங்கும் முன், உரிமையாளர்களும் சரிவர விசாரித்து பார்க்க வேண்டும்.
இவ்வாறு, அவர் கூறினார்.