/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
திருப்பூர் தனம் மெட்ரிக் பள்ளி 10ம் வகுப்பு தேர்ச்சியில் அசத்தல்
/
திருப்பூர் தனம் மெட்ரிக் பள்ளி 10ம் வகுப்பு தேர்ச்சியில் அசத்தல்
திருப்பூர் தனம் மெட்ரிக் பள்ளி 10ம் வகுப்பு தேர்ச்சியில் அசத்தல்
திருப்பூர் தனம் மெட்ரிக் பள்ளி 10ம் வகுப்பு தேர்ச்சியில் அசத்தல்
ADDED : மே 15, 2024 12:36 AM
திருப்பூர்;குளத்துப்பாளையம் தனம் மெட்ரிக் பள்ளி, பத்தாம் வகுப்பு தேர்வில், 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது.
திருப்பூர், ஊத்துக்குளி ரோடு, குளத்துப்பாளையத்தில், தனம் மெட்ரிக் பள்ளி உள்ளது. பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில், பள்ளி மாணவ, மாணவியர், 100 சதவீத தேர்ச்சி பெற்று, சாதனை படைத்துள்ளனர்.மாணவர் பாலபிரசாத், 428 மதிப்பெண் பெற்று, முதலிடம் பெற்றுள்ளார். மாணவர் செல்வகணேஷ், 423 மதிப்பெண் பெற்று இரண்டாமிடமும், மாணவர் விஷால், 418 மதிப்பெண் பெற்று மூன்றாமிடமும், மாணவி தேவதர்ஷினி 400 மதிப்பெண் பெற்று நான்காவது இடத்தையும் பிடித்துள்ளனர். சாதித்த மாணவ, மாணவியரை, பள்ளி தாளாளர் தனலட்சுமி, பள்ளியின் முதல்வர் அகிலா ஆகியோர் பாராட்டினர்.