/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
துவக்க, நடுநிலைப்பள்ளி தேர்வு; 10 நாட்களுக்குள் முடிக்க உத்தரவு
/
துவக்க, நடுநிலைப்பள்ளி தேர்வு; 10 நாட்களுக்குள் முடிக்க உத்தரவு
துவக்க, நடுநிலைப்பள்ளி தேர்வு; 10 நாட்களுக்குள் முடிக்க உத்தரவு
துவக்க, நடுநிலைப்பள்ளி தேர்வு; 10 நாட்களுக்குள் முடிக்க உத்தரவு
ADDED : மார் 21, 2024 11:31 AM
திருப்பூர்:லோக்சபா தேர்தலுக்கு முன்பே இறுதியாண்டு தேர்வுகளை முடிக்க வேண்டியிருப்பதால், பத்து நாட்களுக்குள் துவக்க, நடுநிலைப்பள்ளி தேர்வுகளை நடத்தி முடிக்க தொடக்க கல்வித்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
ஏப்., 19ம் தேதி லோக்சபா தேர்தல் நடக்கவுள்ளது. தேர்தல் வெள்ளியன்று நடப்பதால், அதற்கு மூன்று நாட்களுக்கு முன்பாக, 16ம் தேதி (செவ்வாய்) தேர்தல் அலுவலர் வசம் பள்ளிகள் ஒப்படைக்கப்பட உள்ளது.
முதல் கட்ட தேர்தல் நடக்கும் மாநிலங்களில் பட்டியலில் தமிழகம் இடம் பெற்றுள்ளதால், தேர்தலுக்கு இன்னமும், 29 நாட்கள் மட்டுமே இருப்பதால், இறுதியாண்டு தேர்வுகளை முன்கூட்டியே முடிக்க மாவட்ட கல்வித்துறை, தொடக்க கல்வித்துறைக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, ஒன்று முதல் மூன்றாம் வகுப்புக்கு, ஏப்., 2 முதல், 8 வரையும், 4 மற்றும் ஐந்தாம் வகுப்புக்கு, ஏப்., 12 வரையும், ஆறு, ஏழு மற்றும் எட்டாம் வகுப்புக்கு, ஏப்., 2 முதல், 12 வரையும் என பத்து நாட்களுக்குள் அனைத்து தேர்வுகளையும் முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
தேர்வுகள் முன்னதாக துவங்க தேர்தல் ஒரு காரணமாக இருந்தாலும், நடப்பு கல்வியாண்டுக்கான பள்ளியின் கடைசி வேலை நாள், ஏப்., 26 என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பள்ளி கல்வி இயக்குனர் தரப்பில் இருந்து அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி மற்றும் தொடக்க கல்வி அலுவலர்களுக்கு, விரிவான சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
கூடுதல் விடுமுறை?
மேற்கண்டவாறு தேர்வுகள் நடந்து முடிந்து, ஏப்., 13 முதல் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டால், துவக்க, நடுநிலைப்பள்ளிகளுக்கு (ஜூன் 3 பள்ளி திறப்பாக இருந்தால்) 58 நாட்கள் விடுமுறை கிடைக்க வாய்ப்புள்ளது. ஓட்டு எண்ணிக்கை (ஜூன் 4ம் தேதி) காரணமாக பள்ளிகள் திறப்பு தள்ளி போனால், விடுமுறை கூடுதலாகும் வாய்ப்பும் ஏற்பட்டுள்ளது.

