ADDED : ஜூலை 09, 2024 10:41 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அவிநாசி அருகே வேலாயுதம்பாளையம் ஊராட்சியில், ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் வேலை கேட்டு இ.கம்யூ., சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
அதில், ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் வேலை கேட்டும், வேலையில்லா காலத்திற்கான நிவாரணம் வழங்க கோரியும் ஊராட்சி செயலர் பரமேஸ்வரனிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. இ.கம்யூ., ஒன்றிய குழு உறுப்பினர் செல்வராஜ், ஒன்றிய செயலாளர் முத்துசாமி, விவசாய தொழிலாளர் சங்கத்தின் ஒன்றிய தலைவர் கோபால், நகரச் செயலாளர் முகமது யாஷின், ஒன்றிய குழு உறுப்பினர் சாவித்திரி, ஏ.ஐ.டி.யு.சி., தாலுகா தலைவர் கனகராஜ் மற்றும் தொழிலாளர்கள் பங்கேற்று மனு அளித்தனர்.