ஆன்மிகம்
குண்டம் திருவிழா
80வது நந்தா தீப குண்டம் திருவிழா, அங்காளபரமேஸ்வரி கோவில், காந்திபுரம், அவிநாசி. அம்மன் புறப்பாடு, காலை, 8:00 மணி. அம்மன் சப்பரத்தில் பவனி மற்றும் பூவோடு ஊர்வலம், மாலை 5:00 மணி.
பொங்கல் திருவிழா உற்சவம்
சக்தி விநாயகர், பாலவிநாயகர், பாலமுருகன், முத்துமாரியம்மன் கோவில், பிள்ளையார் நகர், கோவில்வழி, திருப்பூர். சிறப்பு பூஜை, காலை மற்றும் மாலை, 6:00 மணி.
பொது
10வது ஆண்டு விழா
'வனத்துக்குள் திருப்பூர்' திட்டத்தின் 10வது ஆண்டு விழா, 11ம் ஆண்டு நாற்றுப்பண்ணை துவக்க விழா, ஐ.கே.எப்., வளாகம், பழங்கரை, திருமுருகன்பூண்டி. பட்டிமன்றம்: பேச்சாளர்கள் ராஜா, பாரதி பாஸ்கர். தலைப்பு: இயற்கை வளங்கை பாதுகாக்க வேண்டியது பொதுமக்களா... பொறுப்பில் இருப்பவர்களா'. காலை, 9:00 மணி. முன்னிலை : 'தினமலர்' நாளிதழ் இணை ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தி ராமசுப்பு, தலைமையுரை: 'வீ த லீடர்ஸ் பவுண்டேஷன்' முதன்மை சேவகர் அண்ணாமலை குப்புசாமி. தலைப்பு: சூழலியல் மாற்றத்தில் தொழில் முனைவோர் பங்கு. காலை, 9:00 மணி முதல் மதியம், 12:00 வரை.
ராமகிருஷ்ணர் ஜெயந்தி விழா
ஸ்ரீராமகிருஷ்ணனர் 190வது ஜெயந்தி விழா மற்றும் பயிற்சி வகுப்பு துவக்க விழா, ஸ்ரீவிவேகானந்த சேவாலயம், திருமுருகன்பூண்டி. காலை, 10:00 மணி.
'சிரிஸ்டா -2025'கலாசார திருவிழா
கல்லுாரிகளுக்கு இடையேயான கலாசார திருவிழா, 'சிரிஸ்டா- 2கே25', சசூரி கல்லுாரி, விஜயமங்கலம், காலை, 10:00 மணி.
மனவளக்கலை யோகா
எம்.கே.ஜி., நகர் மனவளக்கலை யோகா தவமையம், கொங்கு நகர் கிழக்கு, திருப்பூர். காலை மற்றும் மாலை 5:00 மணி முதல், 7:30 வரை.
***