ADDED : மார் 04, 2025 06:43 AM
n ஆன்மிகம் n
பொங்கல் திருவிழா
ஸ்ரீ சக்திவிநாயகர், ஸ்ரீ பால விநாயகர், ஸ்ரீ பாலமுருகன், ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில், பிள்ளையார்நகர், கோவில்வழி, திருப்பூர். பூவோடு, முத்தாரம்மன் கோவிலில் இருந்து முளைப்பாலிகை எடுத்து ஊர்வலம் - மாலை 4:00 மணி. படைக்கலம் கோவிலுக்கு வந்து சேருதல் - இரவு 8:00 மணி.
n பட்டத்தரசியம்மன் கோவில், வேலாயுதம்பாளையம், சாமளாபுரம், பல்லடம். பூச்சாட்டுதல் பூஜை - இரவு 8:00 மணி.
n விநாயகர், மாகாளியம்மன், மாரியம்மன் கோவில், பனப் பாளையம், பல்லடம். பூவோடு எடுத்தல் - மாலை 4:00 மணி.
குண்டம் திருவிழா
நந்தா தீப குண்டம் திருவிழா, அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில், அவிநாசி. மகாபிேஷகம் உற்சவம் பூர்த்தி - காலை 9:00 மணி.
பால்குட திருவிழா
19ம் ஆண்டு பால்குட திருவிழா, ஸ்ரீ ஆனந்த விநாயகர், ஸ்ரீ கருமாரியம்மன், ஸ்ரீ கருப்பராயன் கோவில், திருஆவினன்குடிநகர், சிறுபூலுவப்பட்டி, திருப்பூர். மூகாம்பிகை காலனி, ஸ்ரீ துர்கா விநாயகர் கோவிலில் இருந்து பால்குட ஊர்வலம், அபிேஷகம், அலங்கார பூஜை, அன்னதானம் - காலை 10:00 மணி.
n பொது n
ஆய்வுக் கூட்டம்
அனைத்து துறைகளில் நடைபெற்று வரும் வளர்ச்சித்திட்ட பணி தொடர்பான ஆய்வுக்கூட்டம், கலெக்டர் அலுவலக வளாகம், திருப்பூர். பங்கேற்பு: அமைச்சர் சாமிநாதன். மாலை 3:30 மணி.
பணிகள் துவக்க விழா
உப்பாற்றில் குறுக்கே தடுப்பணை, காசிலிங்கம்பாளையம் - நிராயூர் சாலை பலப்படுத்துதல், மானுார்பாளையம் - கருப்பட்டிபாளையம் சாலை மேம்படுத்துதல் பணி துவக்க விழா, கள்ளிப்பாளையம் நவநாரி ஊராட்சி, குண்டடம், தாராபுரம். பங்கேற்பு: அமைச்சர் சாமிநாதன். காலை 11:00 மணி.
துவக்க விழா
'ஆர்.எம்.எஸ்., மினி டெக்ஸ்டைல்ஸ் பார்க்' துவக்க விழா, வீரபாண்டி, பல்லடம் ரோடு, திருப்பூர். பங்கேற்பு: கைத்தறித்துறை அமைச்சர் காந்தி, செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன். மதியம் 12:30 மணி.
காது பரிசோதனை முகாம்
உலக செவித்திறன் தினத்தை முன்னிட்டு, இலவச காது பரிசோதனை முகாம், மெட்ெஹல்ப் ஹியரிங் எய்ட் சென்டர், கீதா பார்மசி அருகில், புஷ்பா தியேட்டர் பஸ் ஸ்டாப், அவிநாசி ரோடு, திருப்பூர். காலை 10:00 மணி முதல்.
பிறந்த நாள் விழா
தமிழக முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாள் விழா தெருமுனை பிரசார கூட்டம், நல்லுார். ஏற்பாடு: மத்திய மாவட்ட தி.மு.க., மாலை 6:00 மணி. வலையங்காடு - இரவு 7:00 மணி.
சிறப்பு விற்பனை
திறப்பு விழாவை முன்னிட்டு சிறப்பு சலுகை விற்பனை திருவிழா, சக்தி ஜூவல்லர், மேட்டுப் பாளையம் பஸ் ஸ்டாப், பி.என்., ரோடு, திருப்பூர். காலை 10;00 மணி.
மனவளக்கலை யோகா
எம்.கே.ஜி., நகர் மனவளக்கலை யோகா தவமையம், கொங்குநகர் கிழக்கு, திருப்பூர். காலை மற்றும் மாலை 5:00 முதல், 7:30 மணி வரை.