ADDED : ஆக 06, 2026 05:51 PM
ஆன்மிகம்
கோமாதா பூஜை
உலக நலன் வேண்டி கோமாதா பூஜை, வேள்வி சங்காபிேஷகம், 36வது ஆண்டு விழா, வாழைத்தோட்டத்து அய்யன் கோவில் வளாகம், அய்யம்பாளையம், சோமனுார். ஏற்பாடு: பெத்தாமுச்சிபாளையம் அய்யன் கோமாதா பூஜை சங்கம். காலை 6:00 முதல் மதியம் 1:00 மணி வரை. அன்னதானம் – காலை 8:00 முதல் மதியம் 2:00 மணி வரை.
சிறப்பு அலங்காரம்
* ஆடி நான்காவது வார வெள்ளியை முன்னிட்டு சிறப்பு வளையல் அலங்காரம், போலீஸ் லைன் மாரியம்மன் கோவில், கோர்ட் வீதி, திருப்பூர். காலை 7:00 மணி.
* அழகு நாச்சியம்மன், ஸ்ரீ பத்ர காளியம்மன் கோவில், சேவூர். அபிேஷகம் – காலை 7:00 மணி. சிறப்பு அலங்காரம், மகா தீபாராதனை – காலை 9:00 மணி.
பவித்ரோத்ஸவம்
ஸ்ரீ வேங்கடேஸ்வர சுவாமி கோவில், திருப்பூர் திருப்பதி, ஊத்துக்குளி ரோடு, திருப்பூர். ரக்ஷா பந்தனம், கும்ப ஸ்தாபனம், பவித்ரம் சாற்றுதல், யாகசாலை ேஹாமம், 91 திருவாராதனங்கள் – காலை 8:00 மணி. பூர்ணாகுதி, சாற்றுமுறை – காலை 11:00 மணி. புறப்பாடு, யாகசாலை ேஹாமம் – மாலை 6:00 மணி.
தீர்த்தக்குட திருவிழா
24ம் ஆண்டு ஆடித்தீர்த்தக்குட திருவிழா, ஸ்ரீ புற்றுக்கண் மாரியம்மன் கோவில், காமராஜ் நகர், சேவூர். ஸ்ரீ செம்மியநல்லுார் கோவிலில் இருந்து பம்பை உடுக்கை மேளதாளத்துடன் ஸ்ரீ சக்தி குடங்கள் திருவீதி உலா – காலை 10:00 மணி.
ஆடித்திருவிழா
காமாட்சியம்மன் கோவில், செங்காடு, அவிநாசி. திருவிளக்கு வழிபாடு – மாலை 5:00 மணி.
பொங்கல் விழா
ஸ்ரீ ஆலடி கருப்பராயர் சுவாமி கோவில், மேற்கு வீதி, திருமுருகன்பூண்டி. மறுபூஜை – காலை 10:00 மணி.கும்மியாட்டம்
ஸ்ரீ மாகாளியம்மன் கோவில், தெற்குவீதி, பெருமாநல்லுார். பவளக்கொடி கும்மி கலைக்குழு அறக்கட்டளையின் கும்மியாட்டம் – மாலை 6:00 மணி.
பொது
குறைகேட்பு கூட்டம்
திருநங்கைகளுக்கான குறைகேட்பு கூட்டம், கூட்ட அரங்கம், கலெக்டர் அலுவலக வளாகம், பல்லடம் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: மாவட்ட நிர்வாகம். காலை 11:00 மணி.
சிறப்பு முகாம்
அடையாள அட்டை வழங்க மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு பரிசோதனை முகாம், கூட்ட அரங்கம், கலெக்டர் அலுவலகம், பல்லடம் ரோடு, திருப்பூர். காலை 10:00 மணி.
ஆதார் சிறப்பு முகாம்
அவிநாசி ரோட்டரி சங்கம், அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில் பின்புறம், மங்கலம் ரோடு, அவிநாசி. ஏற்பாடு: தபால் துறை, ரோட்டரி அவிநாசி நெக்ஸ்ட் ஜெனரேசன். காலை 9:30 முதல் மாலை 4:00 மணி வரை.
விளையாட்டு
வாள் சண்டை
மாணவ, மாணவியர் வாள்சண்டை போட்டி, நிப்ட்–டீ கல்லுாரி, முதலிபாளையம், திருப்பூர். ஏற்பாடு: பள்ளி கல்வித்துறை. காலை 10:00 மணி முதல்.
