/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
இன்று 'மக்களுடன் முதல்வர்' முகாம்
/
இன்று 'மக்களுடன் முதல்வர்' முகாம்
ADDED : ஆக 06, 2024 11:29 PM
திருப்பூர் : ஊத்துக்குளி, பல்லடம், தாராபுரம், அவிநாசி ஒன்றியங்களில், இன்று மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நடக்கிறது.
இன்று (7ம் தேதி), ஊத்துக்குளி ஒன்றியம்- காவுத்தம்பாளையம், கூனம்பட்டி, செங்காளிபாளையம், கருமாஞ்சிறை, நவக்காடு ஊராட்சி களுக்கு, சாமியார்பாளையம் பெரியநாயகி அம்மன் மண்டபம். பல்லடம் ஒன்றியத்தில், தேவராயன்பாளையம், கொங்கு திருமண மண்டபத்தில், இச்சிப்பட்டி ஊராட்சிக்கும் முகம் நடக்கிறது. தாராபுரம் ஒன்றியத்தில், கோவிந்தாபுரம் குமாரப்ப வேளாளர் திருமண மண்டபத்தில், பொட்டிக்காம் பாளையம், பொன்னாபுரம், கோவிந்தாபுரம், சின்னப்புத்தார் ஊராட்சிகள்.
அவிநாசி ஒன்றியத்தில், கருவலுார் ரத்தினமூர்த்தி மஹாலில், கருவலுார், நம்பியாம்பாளையம், உப்பிலிபாளையம், ராமநாதபுரம், கானுார் ஊராட்சிகளுக்கும், முகாம் நடக்க உள்ளது. பொதுமக்கள், தங்களுக்கு கோரிக்கை மனு வாயிலாக தெரிவித்து, அரசு அனைத்து துறைகளின் சேவைகளை பெறலாம் என மாவட்ட நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது.