/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சுங்கச்சாவடி அகற்றம் நிறுத்தம்; விவசாயிகள் போராட்டம்
/
சுங்கச்சாவடி அகற்றம் நிறுத்தம்; விவசாயிகள் போராட்டம்
சுங்கச்சாவடி அகற்றம் நிறுத்தம்; விவசாயிகள் போராட்டம்
சுங்கச்சாவடி அகற்றம் நிறுத்தம்; விவசாயிகள் போராட்டம்
ADDED : செப் 05, 2024 12:35 AM

பொங்கலுார் : அவிநாசி முதல் அவிநாசிபாளையம் வரையிலான தேசிய நெடுஞ்சாலையில், பொங்கலுார் அருகே வேலம்பட்டியில் சுங்கச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது.
அந்த இடம் நீர் நிலை புறம்போக்கு என்பதால், அதனை அகற்ற வேண்டும் என்று சுங்கச்சாவடி எதிர்ப்பு இயக்கம் தொடர்ந்து போராடியது. இது தொடர்பாக சுங்கச்சாவடி எதிர்ப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணசாமி கோர்ட்டில் வழக்கு தொடுத்தார்.
எதிர்ப்பு அதிகரிக்கவே நேற்று முன்தினம் சுங்கச்சாவடியை அகற்றுமாறு பொங்கலுார் பி.டி.ஓ., ஷெல்டனுக்கு கலெக்டர் உத்தரவிட்டிருந்தார். அதன் அடிப்படையில், நேற்று காலை, 11:00 மணிக்கு வடக்கு அவிநாசி பாளையம் ஊராட்சி தலைவர் நடராஜ் தலைமையில் பொதுமக்கள், விவசாயிகள் என பலர் சுங்கச்சாவடி அருகே திரண்டனர்.
இந்நிலையில், திடீரென்று சுங்கச்சாவடி ஆக்கிரமிப்பு அகற்றுவதை, மறு உத்தரவு வரும் வரை நிறுத்தி வைக்குமாறு கலெக்டர் உத்தரவிட்டதாக பி.டி.ஓ., ஷெல்டன் கூறினார்.
இதனால், ஆத்திரமடைந்த விவசாயிகள் அவரது காரின் முன் படுத்தும், சுங்கச்சாவ டியை முற்றுகையிட்டும் போராட்டம் நடத்தினர். நீண்ட நேர போராட்டத்திற்குப் பின், அனைவரும் கலைந்து சென்றனர்.