/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
விலை உயர்வு எதிரொலி; தக்காளி சட்னி 'மாயம்'
/
விலை உயர்வு எதிரொலி; தக்காளி சட்னி 'மாயம்'
ADDED : மே 31, 2024 01:33 AM
திருப்பூர்;வரத்து குறைவால், திருப்பூரில் கிலோ, 20 ரூபாய்க்கு விற்ற தக்காளி, விலை உயர்ந்து, கிலோ, 30 முதல், 35 ரூபாயாகியுள்ளது. சில்லறை விலையில் தக்காளி கிலோ, 40 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. தக்காளி விலை உயர்வால், கையேந்தி பவன், டிபன் கடைகளில் தக்காளி சட்னி வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளது. சாம்பார் உள்ளிட்ட குழம்புகளில் தக்காளி சேர்ப்பது குறைக்கப்பட்டுள்ளது.
இந்தாண்டு துவக்கத்தில் தக்காளி விலை கிலோ, 100 ரூபாயை எட்டி, இல்லத்தரசிகளை திகைக்க வைத்தது.
எப்போது குறையும்?
கடந்த பத்து நாட்களுக்கு முன் மழையால் உழவர் சந்தை, மார்க்கெட்டுக்கான வரத்து குறைந்தது. ஒரே நேரத்தில், வெளிமாநில, உள்ளூர் வரத்து இரண்டுமே குறைந்ததால், ஞாயிற்றுக்கிழமை ஒரே நாளில் தக்காளி விலை, கிலோ, 35 ரூபாயை எட்டியது. பருவம் தவறி பெய்த கோடை மழை, தக்காளி விளைச்சலை திடீரென பாதித்தது. இருப்பினும், தற்போது மழை குறைந்து விட்ட நிலையில், வரும் நாட்களில் தக்காளி வரத்து அதிகரித்தால், விலை குறையும் என்கின்றனர், விவசாயிகள்.